அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 8, 2011

‘அறிவியல்


செவ்வாயை ஆராயப் போகும் ஆய்வு ஊர்தி!

Font size:   
செவ்வாயை ஆராயப் போகும் ஆய்வு ஊர்தி!
சவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு செய்வதற்கான புதிய நவீன ஆய்வு ஊர்தியை அமெரிக்காவின் `நாசா’ உருவாக்கியுள்ளது. `கிïரியாசிட்டி ‘((Curiosity)) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஊர்தியில் உள்ள `சாம்’ (sam) என்ற நவீன அமைப்பு குறிப்பிடத்தக்கது. `சாம்பிள் அனாலிசிஸ் அட் மார்ஸ்’ (Sample Analysis at Mars) எனப்படும் `சாம்’, கிரீன்பெல்ட்டில் உள்ள கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டரில் வடிவம் பெற்றுள்ளது.
இந்த `கிïரியாசிட்டி’ ஆய்வு ஊர்தி முந்தைய ஆய்வு ஊர்திகளை விட நவீனமானது மட்டுமல்ல, ஒரு முக்கியமான ஆய்விலும் ஈடுபடப்போகிறது. அதாவது, பூமிவாழ் உயிரினங்களின் கட்டுமானப் பொருட்களான `ஆர்கானிக் மாலிக்ïல்கள்’ செவ்வாய்க் கிரகத்தில் காணப்படுகின்றனவா என்று ஆராயப் போகிறது. அந்த ஆய்வை `சாம்’ மேற்கொள்ளும்.
மேற்கண்ட `ஆர்கானிக் மாலிக்ïல்களில்’ கார்பன், ஹைட்ரஜன் மற்றும் கூடுதல் மூலகங்கள் காணப்படுகின்றன. எந்த உயிரும் இவை இல்லாமல் இருக்க முடியாது.
மிக இலேசான `ஆர்கானிக்’ தடயத்தையும் `கிïரியாசிட்டி’யால் கண்டுபிடிக்க முடியும். முன்பு செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட வேறு எந்த ஆய்வு ஊர்தியையும் விட பல்வேறு வகையான ஆர்கானிக் மூலக்கூறுகளையும் இதனால் கண்டுபிடிக்க முடியும். மேலும் உயிருக்கான வேறு தடயங்கள், முந்தைய சூழ்நிலைகள் குறித்த விவரங்களையும் அளிக்க வல்லது.
கிïரியாசிட்டியில் உள்ள `சாம்’ மற்றும் 9 நவீன உபகரணங்கள், செவ்வாய்க் கிரகத்தின் எந்தப் பகுதியிலாவது உயிர் வாழ்வதற்கான சூழல் உள்ளதா, அக்கிரகத்தில் எப்போதாவது உயிர்கள் காணப்பட்டனவா என்றும் ஆய்வு செய்து தெரிவிக்கும்.
இந்த ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் 18-ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்படும் `கிïரியாசிட்டி’, செவ்வாய் நிலப்பரப்பில் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் போய் இறங்கும். அங்கு இரண்டாண்டு காலத்துக்கு இந்த ஊர்தி ஆய்வில் ஈடுபடப் போகிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment