அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 8, 2011

‘அறிவியல்’


Archive for the ‘அறிவியல்’ Category

அதிக விசம் கொண்ட உலகின் மிகச்சிறிய தவளை.!

அதிக விசம் கொண்ட உலகின் மிகச்சிறிய தவளை.!
தென் அமெரிக்கா காடுகளுக்குள் காணப்படும் மிகச்சிறிய தவளை அதிகளவிலான விசத்தன்மை கொண்ட உலகின் மிகச்சிறிய தவளையாக கருதப்படுகிறது. ஒரு பென்சில் கூர் முனையில் அமர்ந்திருக்க கூடிய அளவில் இந்த தவளை இனம் காணப்படுகிறது.  அளவில் மிகச்சிறியதாக காணப்பட்டாலும் இதன் தோலில் காணப்படும் விசத்தின் தன்மை மிகப்பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை எனக்கூறப்படுகிறது.  எந்தப்பருவத்திலும் இதனுடைய வளர்ச்சி வெறும் சென்ரிமீற்றர் அளவே காணப்படுகிறதாம். தற்போது இவ்வகை தவளை இனங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக ஆபத்தான தொங்கு பாலம்..!(படங்கள் இணைப்பு)

உலகின் மிக ஆபத்தான தொங்கு பாலம்..!(படங்கள் இணைப்பு)
உலகின் மிக ஆபத்தான பாலமாக பாகிஸ்தானில் காணப்படுகின்ற தொங்கு பாலம் கருதப்படுகின்றது.  இது பாகிஸ்தானின் வடபகுதியில் அமைந்துள்ளது.  இந்த தொங்கு பாலமானது மிகவும் பழமை வாய்ந்தாத காணப்படுவதாலும்  அதனுடைய பெரும்பாலான பகுதி சேதமடைந்துள்ளமையினாலும் உலகிலயே மிகவும் ஆபத்து நிறைந்த தொங்கு பாலமாக இப்பாலம் கூறப்படுகின்றது.

அசைவம் உண்னும் ஆபத்தான காளான்கள்

அசைவம் உண்னும் ஆபத்தான காளான்கள்
காளான்களில் ஒட்டுண்ணிகள், சாறுண்ணிகள் தவிர, அசைவம் உண்ணும் காளான்களும் உள்ளன. இவை பூஞ்சனம் வகையைச் சேர்ந்தவை. இவற்றின் உடல் அமைப்பு இழை களால் ஆனதாக உள்ளது. இந்த வகைக் காளான்களில் ஒன்று, கோதுமைப் பயிரைத் தாக்கும் நூற்புழுவை உண்டு உயிர் வாழ்கிறது. அசைவம் உண்ணும் காளான் களில் சிலவகை, ஒரு குறிப்பிட்ட இனப் பிராணிகளை மட்டும் உண்பதற்கு ஏற்ற உடல் அமைப்பைப் பெற்றிருக்கின்றன. வேறு சில காளான்களோ, புழுக்களைப் பிடிப்பதற்கு ஏற்ற தகுந்த பொறிகளைப் போன்ற வசதிகளைப் பெற்றிருக்கின்றன. [...]

பூனைகளால் இனிப்புச்சுவையை உணரமுடியாது ஏன்??

பூனைகளால் இனிப்புச்சுவையை உணரமுடியாது ஏன்??
முலையூட்டிகளின் நாக்கில் சுவை கலங்கள் உள்ளன. நாக்கிலுள்ள சுவை கலங்கள் கொத்தாக சுவை அரும்புகளாக ஒன்றிணைந்துள்ளன. இரண்டு வெவ்வேறான நிறமூர்த்தங்களால் (Tas1r2 & Tas1r3) தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஒன்றிணைந்த புரதங்களினாலேயே சுவை கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சுவை கலங்கள், உணவிலுள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து அந்த தகவலினை மூளைக்கு அனுப்பும். புலி, சிறுத்தை உள்ளடங்களாக 6 பூனைகளின் உமிழ் நீர் மற்றும் இரத்த மாதிரிகளினை ஆய்வுசெய்த ஆய்வாளர்கள், இந்த விலங்கினங்கள் உபயோகமற்ற நிறமூர்த்தத்தினை கொண்டிருப்பதனை தமது ஆய்வில் [...]

உலகிலயே கடலுக்குள் அமைக்கப்பட்ட மிக நீளமாக பாலம்!(படங்கள் உள்ளே)

உலகிலயே கடலுக்குள் அமைக்கப்பட்ட மிக நீளமாக பாலம்!(படங்கள் உள்ளே)
உலகில் கடலுக்குள் அமைக்கப்பட்ட மிக நீளமான பாலம் கிழக்கு சீனாவின் Shandong மாகாணத்தில் Huangdao மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இப்பாலம் மூன்று பாலங்களும் ஒன்றாக வந்து சந்திப்பதாக அமைந்துள்ளது. இது 26.4 மைல் துாரத்திற்கும் அதிக நீளமுடையதாக காணப்படுகிறது. இந்தப்பாலத்தின் கட்டுமானப்பணிகளுக்காக சுமார் 4 வருடங்கள் செலவாகியுள்ளதோடு 5.5 பில்லியன் பவுண்டுகள் செலவாகியுள்ளதாம். 2011ம் ஆண்டு மக்கள் போக்குவரத்து செய்யக்கூடியவாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மனிதனை கொல்லும் விசம்கொண்ட தங்கத்தவளைகள்!(வீடியோ உள்ளே)

மனிதனை கொல்லும் விசம்கொண்ட தங்கத்தவளைகள்!(வீடியோ உள்ளே)
நீரிலும், நிலத்திலும் வாழும் திறன் பெற்ற தவளைகள் மிகவும் சாதுவானவை, ஆபத்தில்லாதவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பசிபிக் கடலோரங்களில் வசிக்கும் ஒரு வகை தவளை, கொடிய விஷம் கொண்டது. ஒரே கடியில், மனிதனை பரலோகத்திற்கு அனுப்பும் அளவிற்கு இத்தவளையின் விஷம் ஆபத்தானது. பூமியில் உள்ள உயிரினங்களில் அதிக விஷம் கொண்டது இந்த தவளையினம் என்று ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர். “தாவும் தங்கத் தவளை’ என்று அழைக்கப்படும் இந்த, “கோல்டன் டார்ட் பிராக்’ கொலம்பியா [...]

உலகில் கடலின்கீழ் அமைக்கப்பட்ட முதலாவது தபால் நிலையம்.

உலகில் கடலின்கீழ் அமைக்கப்பட்ட முதலாவது தபால் நிலையம்.
உலகில், கடலின்கீழ் அமைக்கப்பட்ட முதலாவது தபால் நிலையம் பஹாமாஸ் நாட்டிலேயே அமைந்துள்ளது. விஞ்ஞான வசதிவாய்ப்பின் ஒரு அங்கமாக இந்த தபால் நிலையம் 1939ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் நாள் திறக்கப்பட்டது. இந்த கடல்கீழ் தபால் நிலையமானது, ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஜோன் எர்னெஸ்ட் வில்லியம்ஸ்சன்(1881-1966) அவர்களினால் உருவாக்கப்பட்டதாகும். கடல்கீழ் புகைப்படத்துறையின் முன்னோடியாகவும் வில்லியம்ஸ்சன், நினைவுகூரப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளை, பசுபிக் சமுத்திர தீவாகிய வனுவாட்டு தேசத்தில் 2003ம் ஆண்டு அமைக்கப்பட்ட, கடல்கீழ் தபால் நிலையத்தில் தபால் உறைகளும், [...]

உலகில் மிகப்பெரிய பூ..!!

உலகில் மிகப்பெரிய பூ..!!
உலகில் மிகப்பெரிய பூவாக ரப்லீசியா விளங்குகின்றது. ரப்லீசியாவானது 5 இதழ்களைக் கொண்ட பூவாகும். இந்த பூவின் விட்டமானது 106 சென்ரிமீற்றரிலும் [3அடி] அதிகமாகும். அத்துடன் இந்த பூவின் நிறையானது 10கிலோவிலும் அதிகமாகும். இப்பூவின் நடுவிலுள்ள கிண்ணம் போன்ற பகுதியில் 10லீட்டர் தண்ணீர் ஊற்றலாம். செடியிலோ, மரத்திலோ இந்தப் பூ பூப்பதில்லை.இதொரு ஒட்டுண்ணி. இந்தப் பூ முழுமையாக வளர்ச்சியடைந்து மலர்வதற்கு ஒரு மாதமாகும். பின்னர் இந்தப் பூவானது 5-7 வரையான குறுகிய நாட்களையே வாழ்நாளாகக் கொண்டதாகும். ரப்லீசியாவானது இந்தோனேசியாவின் தீவுகளான [...]

முத்தை உண்ணும் ஒரே உயிரினம்!

முத்தை உண்ணும் ஒரே உயிரினம்!
உலகில் அன்னப்பறவை பற்றி அறியாதவர்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு பழங்கால புராணக்கதைகள் தொடக்கம் சிறுவர்களின் நீதிக்கதைகள் என எல்லாவற்றிலும் அன்னப்பறவை பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக சொல்லுவர்கள் நாம் சிறந்த மனிதர்களாக வரவேண்டுமெனில் அன்னப்பறவை போல வாழ பழகவேண்டும் என. அதற்கு காரணம் அன்னமானது பாலையும் தண்ணீரையும் கலந்து வைக்கின்ற போது அது இரண்டையும் வெவ்வேறாக பிரிந்து பாலை மட்டும் பருகுமாம். அதைப்போல நாம் சமுதாயத்தில் தீயவற்றை ஒதுக்கிவிட்டு நல்லவற்றையே செய்யவேண்டும் என சொல்வதுண்டு. சரி அது சிறுவர்கள் [...]

No comments:

Post a Comment