அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 8, 2011

‘சுவாரஸ்யம்’


இளையராஜா- சில சுவாரஸ்யங்கள்..!!!


என்னை பொறுத்தவரை, மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே விஷயங்கள்....காதலும்,இசையும் தான்..:)))
இந்த மாசம் காதல் மாசம்:) அத்தோடு இசையும் சேர்ந்தால் பொருத்தமாக தான் இருக்கும் இல்லையா?

இளையராஜா எவ்வளவு எனக்கு பிடிக்கும்னு ஏற்கனவே இதில்சொல்லிட்டேன்...:))


இசை ஞானியின் இசையில் நான் ரசித்த சில சின்ன சின்ன சுவாரஸ்யங்கள்.................


1.இசைமேதை பீத்தோவனின்  "fur elise " ட்யூன் கேட்ருக்கீங்களா?? கேட்காட்டி இப்ப கேளுங்க..time 1.13 to 1.27 இல் பியானோ கட்டைகள் வேகம் எடுத்து புகுந்து விளையாடி 1.42 இல் அப்படியே டெம்போ குறைந்து முடியும் ஆர்ப்பரிப்பு இருக்கே....இந்த ட்யூனின் ஹார்மனியில் என் ஓராயிரம் மன அலைகள் அப்படியே அடங்கி விடும் சுகானுபவத்தில் பலமுறை லயிச்சிருக்கேன்...


அப்டியே இளையராஜா இசைக்கு வருவோம்...ஏற்கனவே நான் இளையராஜா சார் இன் இசையில் மந்திரிச்சு விட்ட பொண்ணு :) அதுவும் மௌனராகம் தீம் மியூசிக் எல்லாம்............சான்ஸ் ஏ இல்ல..வயலினின் அதி அற்புத ரீங்காரம் அப்படியே இசையை தெறிச்சு நம் இமை ஓரமாய் வந்து விழும் மேஜிக் தருணம் அது.... கேட்க ஆயிரம் காதுகள் இருந்தாலும் பத்தாது....


பீத்தோவனின் "fur elise " & இளையராஜாவின்  மௌனராகம் "தீம்மியூசிக்" -ஐயும் சேர்த்து fusion போலே பரிமளிக்கும் இந்த இசை கோப்பை கேளுங்க..... யாரு ட்யூன் பெஸ்ட்...?????????? :))







2.இசைஞானியின் அதி தீவிர ரசிகர்களால் (என்னை மாதிரி :) ) இந்த பாட்டு தான் ரொம்பவே அதிகமாய் விரும்பப்பட்டு இருக்கும் னு நினைக்கிறேன்..." தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்அங்கத்தில் யார் தந்தது ??!! "  (ஆட்டோ ராஜா) ."

இது கன்னடம்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி னு பலமொழிகளில் மட்டும் அதே ட்யூன் மாறாமல் வந்தாலும்..கேட்க என்னைக்குமே திகட்டாத அக்மார்க் இசை தேன்...

எந்த மொழியும்,வரிகளும் தேவைப்படாத,ஜஸ்ட் இந்த பாடலின் ட்யூன் மட்டும் இதோ...எனக்கு ரொம்ப ப ப பிடிச்ச flute டில் நிகழும் இசை சுவாரஸ்யத்தை கேளுங்களேன்...முக்கியமாய் அந்த interlude ..ம்ம்...வார்த்தைகளே இல்லை ராஜா சார்...








3.அப்புறம் ராஜா சார் பாடி தமிழ் இல் கேட்டு இருப்போம் நிறைய..வேறு மொழியில் ராஜா சார் இன் குரலில் கேட்கும்போது தன்னிச்சையா ஒரு சுவாரஸ்யம் வந்திருது...

இந்த "கன்னடா" பாட்டில் ராஜாவின் குரலை கேட்டு பலமுறை அசந்திருக்கேன். சமஸ்கிருதத்தில் தெள்ள தெளிவாய் அப்படிங்கிறதை  " ஸ்பஷ்டமாய் " னு சொல்லுவாங்க..ராஜா சார் இன் ஸ்பஷ்டமான கன்னடா சாங் இதோ..அவரின் ட்ரேட் மார்க் "ந..நா.."ஹம்மிங்கோடு ..:))


  16/16 


Archive for the ‘சுவாரஸ்யம்’ Category

மரத்தால் உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர்.(படங்கள் இணைப்பு)

மரத்தால் உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர்.(படங்கள் இணைப்பு)
மரத்தால் ஸ்கூட்டரா? சாத்தியப்படுமா? அப்படி சாத்தியப்பட்டாலும் அதை கண்காட்சிக்கு தான் கொண்டு வைக்கலாம் வீதியில் எல்லாம் ஓட்டிச்செல்லமுடியாது. இப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது எம்மை.  ஆனால் எம் சிந்தனைகளுக்கு மேலாக சிந்தித்து சாதித்து காட்டியிருக்கிறார் ஒரு தச்சுத்தொழிலாளி. போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த Carlos Alberto என்ற தச்சன் மூலமே இது சாத்தியப்பட்டிருக்கிறது. ஒரு முறை தன்னுடைய திறமையை வெளிகாட்ட வித்தியாசமாக என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தாராம் இந்த தச்சன்.  அப்போதுதான் அவர் மனதில் உதித்திருக்கிறது தனது பழைய ஸ்கூட்டர். அதைப்போலவே [...]

ராட்சத தவளை வேட்டை…!(படங்கள் இணைப்பு)

ராட்சத தவளை வேட்டை…!(படங்கள் இணைப்பு)
ராட்சத மிருகங்களை வேட்டையாடுவதைப்போலவே ராட்சத தவளைகளையும் வேட்டையாடுகின்றனர்.  மிகப்பெரிய அளவிலாக காணப்படும் இவ்வாறான ராட்சத தவளைகளை வேட்டையாடி அதனை கைகளில் துாக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதையே நீங்கள் படத்தில் காண்கிறீர்கள். ஆனால் இவ்வேட்டை உணவுக்காகவா அல்லது வேறு தேவைக்காகவா என்பது தெரியவில்லை.

உலகின் மிகச்சிறிய மீன்..!!

உலகின் மிகச்சிறிய மீன்..!!
இந்தோனேசியாவின் சுமத்திரா தீவுப்பகுதியல் உலகின் மிகச்சிறிய மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐனவரி மாதம் 2006 ம் ஆண்டு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.  7.9மில்லி மீற்றர் அதாவது வெறும் 0.3இஞ்சி நீளம் உடையதாகவே இம்மீன் காணப்படுகிறது. சாதாரணமாக 7மில்லி மீற்றர்களே இம்மீன் வளரக்கூடியனவை எனக்கூறப்படுகிறது. இது ஓர் நண்டு இனத்தைச்சேர்தவை எனவும் கருதப்படுகிறது.

முதியவர்கள் மட்டும் வாழும் அதிசய கிராமம்!

முதியவர்கள் மட்டும் வாழும் அதிசய கிராமம்!
ஸ்பெயின் நாட்டில் உள்ள ஆல்மெடா டி லா கெஸ்டா என்ற கிராமத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட்டுமே வசிக்கின்றனர். கடந்த 1940-ம் ஆண்டில் இங்கு 500 குடும்பங்கள் இருந்தன. அப்போது பெரும்பாலானவர்கள் வேலை தேடி இங்கிருந்து வெளியேறினர்.  அதன் பிறகு திரும்பவில்லை. தற்போது இங்கு 15 குடும்பத்தினரே உள்ளனர். அவர்கள் அனைவரும் 65 வயது முதல் 70 வயதுக்கு மேல்தான் உள்ளனர். இதனால் அங்கு 40 வருடங்களாக புதிதாக குழந்தைகளே பிறக்கவில்லை. இப்போது இங்கு இருப்பவர்களில் 65 [...]

அமெரிக்காவில் பாம்பு வீடு விற்பனைக்கு!

அமெரிக்காவில் பாம்பு வீடு விற்பனைக்கு!
அமெரிக்காவில் இடாகோ மாகாணத்தில் உள்ள ஒரு பாம்பு வீட்டை விற்பனை செய்ய முயற்சி நடந்து வருகிறது. திரைப்படங்களில் “பேய்’ வீடுகளை பார்த்திருப்போம். வித்தியாசமாக, அமெரிக்காவில் உள்ள இடாகோ மாகாணத்தில் “பாம்பு’ வீடு ஒன்று உள்ளது. தப்பித் தவறி ஒரு பாம்பு நமது வீட்டு தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டாலே, அன்றிரவு நமக்கு தூக்கம் வராது. ஆனால், இந்த வீட்டில் ஆயிரக்கணக்கான பாம்புகள் வசிக்கின்றனவாம். வீட்டுக் கூரை, சுவர் என்று எங்கு பார்த்தாலும் பாம்புகள் ஊர்ந்து கொண்டிருக்கின்றனவாம். வங்கியில் கடன் வாங்கி, [...]

உலகில் முதன் முறையாக செயற்கை இடுப்பு பொருத்தப்பட்ட புலி

உலகில் முதன் முறையாக செயற்கை இடுப்பு பொருத்தப்பட்ட புலி
ஜெர்மனியில் உள்ள ஹாலே மிருகக்காட்சி சாலையில் 8 வயதான அரிய வகை மலேயன் பெண் புலி உள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாகவே, அதன் வலது பக்க இடுப்பு பகுதியில் இனம் புரியாத வலி ஏற்பட்டு அவதிக்குள்ளானது. புலியை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள், இடுப்பு பகுதி பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, அந்த புலிக்கு செயற்கை இடுப்பு பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 5 டாக்டர்கள் ஒன்று சேர்ந்து 3 மணி நேரத்துக்கு மேலாக அறுவை சிகிச்சை [...]

3 அடி மணமகன், 2.5 அடி மணமகள் திருமண பந்தத்தில்!

3 அடி மணமகன், 2.5 அடி மணமகள் திருமண பந்தத்தில்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்த இளையபெருமாள் மகன் ஞானஜோதி (27). இவரது உயரம் 3 அடி மட்டுமே. இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர், பெண் பார்த்தனர். அப்போது, புலவன்குப்பத்தை சேர்ந்த சுப்பராமன் மகள் சங்கீதாவும் (21) உயரம் குறைந்தவர் என்ற தகவல் கிடைத்தது. சங்கீதா 2.5 அடி உயரம் உடையவர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, திருமண நாள் குறிக்கப்பட்டது. அதன்படி, பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் உள்ள [...]

29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து வாலிபர்

29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து வாலிபர்
இங்கிலாந்தை சேர்ந்தவர் தலே ரைட். இவர் தனது 14  வயதிலேயே ஒரு குழந்தைக்கு தந்தை ஆனார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்திலேயே மிக குறைந்த வயதில் தந்தை ஆனார் என்ற  பெருமையை பெற்றார். தற்போது இவருக்கு 29 வயது ஆகிறது. இவரது 14 வயது மகள் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறாள். அவள் தன்னுடன் படிக்கும் 15 வயது மாணவனை காதலித்து வருகிறாள். அவர்கள் இருவரும் நெருங்கி பழகினர். அதன் விளைவாக தலே ரைட்டின் மகள் [...]

குழந்தைகளுக்கு அபின் கொடுத்து வளர்க்கும் ஆப்கன் தாய்மார்கள்!

குழந்தைகளுக்கு அபின் கொடுத்து வளர்க்கும் ஆப்கன் தாய்மார்கள்!
வடக்கு ஆப்கானிஸ்தானில் தாய்மார்களே தங்கள் குழந்தைகளுக்கு அபினை (ஓபியம்) ஊட்டி வளர்க்கிறார்கள். அஜீசா தனது 4 வயது மகன் உமைதுல்லாவிற்கு தினமும் காலை உணவாக கைநிறைய சுத்த அபின் தருகிறார். இதுதான் அவனுக்கு மருந்தும் கூட என்கிறார் அஜீசா. அஜீசா பால்க் மாகாணத்தில் கம்பளம் நெசவு செய்யும் ஏழைக் குடும்பத்தில் வந்தவர். அவர் படிக்காதவர். உடல் நலக் கேடுகள் பற்றியோ அல்லது அபின் அடிமையாக்கிவிடும் என்பதோ அவருக்கு தெரியவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், “நான் அவனுக்கு அபின் கொடுக்கவில்லை [...]

பிறந்து 19வது நாளில் தொலைந்தவர் 23 ஆண்டுகள் கழித்து பெற்றோருடன் சேர்ந்த பெண்!

பிறந்து 19வது நாளில் தொலைந்தவர் 23 ஆண்டுகள் கழித்து பெற்றோருடன் சேர்ந்த பெண்!
பிறந்த 19வது நாளில் தொலைந்த பெண் குழந்தை, 23 வயது இளம்பெண்ணாக பெற்றோருடன் இணைந்த அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியை சேர்ந்தவர் ஜாய் ஒயிட். அவரது மனைவி கார்ல் டைசன். 1987 ஆகஸ்ட் மாதத்தில் மன்ஹாட்டன் மருத்துவமனையில் கார்ல் டைசனுக்கு பெண் குழந்தை பிறந்தது. கார்லினா ஒயிட் என பெயரிட்டனர். கார்லினா பிறந்த 19வது நாளில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க நர்ஸ் ஒருவர் எடுத்துச் சென்றார். பிறகு அவர் திரும்பவில்லை. பெற்றோர் புகார் செய்ததும், [...]

No comments:

Post a Comment