அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 8, 2011

சுப்பிரமணிய சாமியா? கொக்கா?



சுப்பிரமணிய சாமியா? கொக்கா?


 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கின் விசாரணையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களும் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு நோட்டீஸ் நோட்டீஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டுக்கு முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவே முக்கியக் காரணம் என்பதால், அவரை சட்டப்படி நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரதீப் சத்தா, இந்த வழக்கில் சுப்ரமணியன் சுவாமி எழுப்பிய கேள்வியின்படி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தியுள்ளீர்களா என்று கேட்டு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும், ராசா கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தொடரலாமா என்றும் சிபிஐ-யிடம் நீதிமன்றம் கேட்டுள்ளது.

பின்னர் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதனிடையே, இந்த வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட சிலரது பெயர்களையும் குற்றம்சாட்டப்படுபவர்களின் பட்டியலில் சேர்க்கக் கோரி, மனு ஒன்றை தாம் தாக்கல் செய்யவிருப்பதாக நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.


No comments:

Post a Comment