அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 15, 2011

அரியவகை உயிரினங்கள்

சமுத்திரப்பசு






தமிழகத்தின் தென் கிழக்குப்பகுதியான ராமேஸ்வரத்தில் இருந்து,கன்னியாகுமரி வரை உள்ள இந்திய எல்லைக்கு உட்பட்ட‌ மன்னார்வளைகுடா கடற்பரப்பு ராட்சத அலைகளற்ற அதிக ஆழமில்லாத அமைதியான கடற்பகுதி.

கடல் வாழ் உயிரினங்கள்,கடற்தாவரங்களின் சரணாலயம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.இங்கு அரிய கடல் வகை தாவரங்கள்,உயிரினங்கள் அதிகம் காணப்படுகின்றது.மீனினங்கள் மட்டும் 400 வகைகளுக்கும் மேலாக கிடைக்கக்கூடிய மீன்வளமிக்க கடற்பரப்பு பகுதி இது.தமிழ்நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 20% மீன்கள் இங்குதான் பிடிக்கப்படுகின்றது.

மன்னார் வளைகுடா பகுதியில் ஆராவாரமற்ற அலைகள் இருப்பதால் இந்த அப்பாவி,அப்பிராணிகள் இங்குதான் அதிகளவில் வாழ்ந்து வந்தது சமுத்திரப்பசு என்றும்,ஆவுளியா என்றும் அழைக்கப்படும் .ஆங்கிலத்தில் ( SEA கௌ,SIRENIA )அழைக்கப்படுகின்றது.

கடல் வாழ் தாவரங்களை உண்பதாலும்,மிகவும் அமைதியாக சாந்தமாக இருப்பதாலும் இதனை சமுத்திரப்பசு அல்லது கடல் பசு என்று பசுவின் பெயர் சொல்லி அழைக்கின்றனர் தென்மாவட்டத்தினர்,மற்றும் மீனவர்கள் ஆவுளியா என்றும் அழைப்பார்கள்.`



படகுகள்,பெரிய வகை மீனினங்கள் இந்த ஆவுளியாவை நோக்கி வந்தால் கடுகள்வேனும் தன் எதிர்ப்பை காட்டாமல்,சுற்றி,சுற்றி தன் எதிர்பாளர்களை வலம் வரும் ஐயோ பாவப்பட்ட பிராணி எனலாம்.

இதன் இறைச்சி அதிக சுவைஉள்ளதால் இதற்கு அதிகம் கிராக்கி உள்ளது.ஒரு கிலோ இறைச்சி சுமார் முன்னூறு வரை விற்பனைசெய்யப்படும்.அன்று ஆவுளியா பிடிபட்டுவிட்டது என்றால் அப்பொழுதெல்லாம் அமர்க்களப்படும்.

இவற்றின் பற்கள் நச்சு முறிவுகளுக்கும்,தலை தலை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும்,இறக்கைப்பகுதி மலசிக்கல் மருந்துக்கும்,தோல் தோல்பொருட்கள் செய்யவும் பயன் பட்டு வந்தது.

இந்த சாதுவான கடல்விலங்கு சுமார் முன்னூறு கிலோவில் இருந்து 450 கிலோவரை எடைகொண்ட கிட்டத்தட்ட ஒரு யானையின்பருமன் உள்ள ஒரு பிரமாண்டமான விலங்காகும்.நாற்பது ஆண்டுகாலம் வரை உயிர்வாழக்கூடியது.

கடல்குதிரை,அட்டை,சங்கு,கடல் ஆமை,சுறா போன்ற அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் இப்பொழுது அழிந்து வரும் ஆபத்தில் இருப்பதால் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட சில கடல் வாழ் உயிரினங்களில் இந்த கடல் பசு முதன்மை வகுகின்றது.

இவற்றைப்பற்றி துப்பு கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்றும் அரசு அறிவித்துள்ளது.கடலில் இப்பொழுது இவ்வகை பிராணி மிகக்குறைந்த அள்வில் இருப்பதால் இதனை உயிர் உள்ள நிலையிலோ,உயிரற்ற நிலையிலோ வைத்து இருந்தால் சட்டப்படி குற்றமாகும்.



சில பகுதிகளில் ரகசியமாக பிடிக்கப்பட்டு,ரகசியமான முறையில் விறகப்பட்டு வரும் அவலம் நடைபெற்று வருகிறது.அரசாங்கம் எவ்வளவோ முன்னெச்சிரிக்கையா இருந்தாலும் மீனவர்களும்,பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் இவ்வகை உயிரினக்கள் காக்கப்படும்.

இதை தடுக்க சட்டரீதியான வழிமுறைகள் இருந்தும் மீனவர்கள் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. கடல்பசுக்கள் இறந்து கரை ஒதுங்கும் போது தான், அவை தற்போது இருப்பதே உறுதி செய்யும் அவல நிலை உள்ளது. இதை பாதுகாக்க மன்னார் வளைகுடா உயர் கோள காப்பக அறக்கட்டளை முன் வர வேண்டும்.

அரிய வகை உயிரினங்கள் அழிய மனிதர்கள் காரணமாக இருக்காமல் அதன் உயிர் காத்து,கடல் வளத்தைப்பெருக்குவது நம் கடமைகளில் ஒன்றாக எண்ணி செயல்படுவோம்.
பொன்னி 








பொன்னி..இந்தப்பெயரைக்கேட்டதும் ஒரு பெண்ணின் பெயர்,கல்கியின் பொன்னியின்செல்வன் என்றுதான் நினைவுக்கு வரும்.நான் சொல்ல வருவதுபொன்னிக்குருவி.ஒரு அழகான,அபூர்வமான,அழிந்து வரும் பறவை இனம்.

பறவை இனங்களிலே அழகான,பிடித்தமான பறவைஇனம் எது வென்றால் நான்பொன்னிக்குருவியைத்தான் கூறுவேன்.அதே போல் இருபத்திஐந்து ஆண்டுகளுக்குமுன் எனக்கு பிடித்த மாமிசமும் பொன்னிக்குருவியின் மாமிசம்தான்.

மழைக்காலங்களில் தோட்டம்,காடுகரைகளில் எங்கிருந்தோ வந்து தஞ்சம் அடையும்அழகிய இந்த சிறு குருவிகளை வேட்டை ஆடி,சிறார்கள்விளையாடி,கறிசமைத்தும்ஆனந்தப்படுவார்கள்.

சிறுவயதில் தோட்டக்காரரிடம் சொல்லிவைத்து வாங்கி வீட்டில் வைத்து அழகுபார்ப்போம்.மொத்தமாக ஒரு வாரத்திற்கும் மேலாக உயிர் வாழ்ந்ததாக சரித்திர ம்இல்லை.ஒன்பது வர்ண நிறங்களுடன் குள்ளமான வாலுடன்,நீளமானகால்கள்,குட்டையான மூக்குடன் பார்ப்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும்இந்த குருவியை indian pitta என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.தமிழில் பலவட்டாரபெயர்களாக பொன்னுத்தட்டான்,கம்பந்தட்டான்,தவிட்டான்,காச்சுஎன்றும்அழைப்பர்.ஒன்பது வர்ணங்களைக்கொண்டதால் இப்பறவைக்கு ஹிந்தியில்நவ்ரங்என்றொரு பெயரும் உண்டு.

குருவியின் உச்சந்தலை மயிரை நடு மற்றும் கட்டை விரலால் கிள்ளித் தூக்கினால்அக்குருவி இடமும்,வலமுமாக ஆடும்பொழுது "பேயாடம்மாபேயாடு!தோட்டக்காட்டில் விட்டுடுவோம்"என்று சிறார்கள் குதூகலக்குரலில்தாலாட்டும் பொழுது இன்னும் வேகமாக இடமும்,வலமுமாக ஆடுவதை நினைக்கும்பொழுது இப்பொழுது பரிதாபமாக உள்ளது.

மழைகாலம் முடிந்ததும் இப்பறவை இனம் வந்த சுவடே தெரியாமல் மறைந்துவிடும்.சென்ற மழைக்காலத்தில் நான் ஊருக்கு சென்று இருந்த பொழுதுபொன்னிக்குருவியை பார்க்கும் ஆவலில் கேட்டு இருந்தேன்.மிகவும் கஷ்டப்பட்டுகொண்டுவந்து சேர்த்தார் தோட்டக்காரர்."இப்போதெல்லாம் குருவி மாட்டுவதேகஷ்டமாக இருக்கு "என்கின்றார் அலுப்புடன்.

எனக்கோ அழிந்து வரும் அந்த பறவை இனத்தை பார்க்க பரிதாபமாகஇருந்தது.அழகான இந்தப்பறவை இனம் உலகில் மனிதர்கள் இருக்கும் வரைஅழிந்துவிடக்கூடாது என்று மனம் பதைபதைக்கின்றதுநான் ரசித்து விளையாடியஇந்த அழகிய பறவை இனத்தை நம் சந்ததிகளும் ரசிக்க வேண்டும் என்ற ஆவல்மிளிர்கின்றதுகுருவியை ஆசைதீர பார்த்தேன்.மென்மையான முடிகளை நீவியபொழுது மனம் சிறுபிள்ளையாகிப்போனதுஉச்சந்தலை முடியை கிள்ளிசந்தோஷமாக பேயாட்டி விட்டு ,வறுத்து சாப்பிட துளியும் மனதில்லாமல் மொட்டைமாடிக்கு பொன்னிகளைத்தூக்கிக்கொண்டு போனேன்.
எதற்கா?
ஜெயசீலன்

No comments:

Post a Comment