நேற்று மத்தியானப்பொழுது.வீதியில் தங்கத்தை கரைத்து அப்படியே ஊற்றி விட்டாற்போல் பொன்னிற கதிரவனின் செங்கதிர்கள்.மதிய உணவுக்கும் பின் ஓய்வெடுக்கும் அமைதி வீதியின் நிசபத்ததிலேயே தெரிகிறது.வழக்கம் போல் அமைதியாக இருந்து பைபிள் படித்துக்
கொண்டிருந்த பொழுது அந்த அழகான அமைதியை கலைக்கும் விதமாக பயங்கரக்கூக்குரல்.
சிறுவர்களின் அட்டகாசம்,சிரிப்பு,ஓ..என்ற சப்தம்.எரிச்சல் அடைந்து அவர்களை விரட்டிவிடும் நிமித்தமாக வெளியே வந்தால் பிளாட் பாரத்தில் அழகானதொரு பிளாக் பாரஸ்ட் கேக்.சுற்றிலும் சிறுவர்கள்.உற்சாகக்கூக்குரலால் கும்மாளம் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.
சிறுவர்களின் உற்சாகத்துள்ளலை நேரில் பார்த்ததும் என் கோபம் சற்று தணிந்து என்ன செய்கிறார்கள் என்று ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தேன்.
பள்ளியில் 11ஆம் வகுப்பு பாடம் முடிந்து 12 ஆம் வகுப்புப்பாடம் ஆரம்பித்து விட்டதாம்.ஆதலால் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள் தெருவில் வைத்து.
என்னையும் சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது.இதற்கெல்லாமா கேக் கட் செய்து கொண்டாடுவார்கள்?ஆர்வத்துடன் வீட்டினுள் திரும்பி வந்து கேமராவுடன் வந்தேன்.
"பசங்களா..போட்டோ எடுக்கட்டுமா"
"ஒகே ஆண்ட்டி"
"அது மட்டுமல்ல..என் பிளாக்கிலும் போடப்போகிறேன்"
"தாராளமா ஆண்ட்டி"
"ஆனால் ஆண்ட்டி ,உங்கள் பிளாக் அட்ரஸ் கொடுத்துடுங்க"
"கண்டிப்பா"
அப்புறம் என்ன கொண்டாட்டத்தை அப்படியே கிளிக்கிக்கொண்டேன்.என்னையும் அவர்களின் உற்சாகம் தொற்றிக்கொள்ள அந்த உற்சாகம் மாறமலே வீட்டுக்குள் வந்து மீண்டும் பைபிள் படிக்க ஆரம்பித்து விட்டேன்.
கேக் தயாரக உள்ளது.
No comments:
Post a Comment