அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Thursday, August 18, 2011

அதிரடி அம்மாவும்,அஞ்சாத அண்ணியும்;நக்கீரன்


அதிரடி அம்மாவும்,அஞ்சாத அண்ணியும்;நக்கீரன்

நக்கீரனில் வெளிவந்த அந்த கட்டுரையை படித்தபோது ,ஆச்சர்யப்பட்டேன்.மு.க.அழகிரி கைதுக்கு நாள் குறித்துவிட்டார்கள்.காந்தி அழகிரி கைதெல்லாம் வேண்டாம்..ஸ்ட்ரைட்டா தலைக்கே குறி என செய்தி கிடைத்தது.

அப்படியே ஜூனியர்விகடன் படித்தால் அஞ்சாநெஞ்சனின் மனைவி,தில்லாக பேட்டி கொடுத்திருந்தார்.அந்தம்மா கிட்ட எல்லாம்,சரண்டர் ஆக மாட்டோம்.வழக்கு வந்தால் எதிர்கொள்வோம் என சூளுரைத்திருந்தார்.இந்தம்மா ஒரு நாள் சிறை கொசுக்கடிகூட தாங்காது எப்படி தில்லா பேட்டி கொடுக்குதே என யோசித்தேன்.இப்பதான்,பொட்டு சுரேஷ்க்கு கூட முதல்வகுப்பு அறை கொடுத்துருக்காங்களே ..மெத்தையாம்,கொசுவர்த்தியாம்,ஹோட்டல் சாப்பாடாம்,ஈவினிங் ஸ்வீட்,காரம் எல்லாம் இருக்காம்.அந்த தைரியமோ என்னவோ.

-------------------------------
திருச்சி,விழுப்புரம் மக்கள் நம்ம தலைகளை ஏன் கைது பண்ணலை என ஜெ..மீது கோபமாக இருக்கிறார்களாம்.முன்னாள் அமைச்சர் நேரு,பொன்முடியைதான் சொல்றேன்.வழக்கு இன்னும்மா தயார் பண்றீங்க..?சீக்கிரம் ஆகட்டும்பா.
------------------------------

சாந்தன்,பேரறிவாளன்,முருகனுக்கு தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்டது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார் வைகோ.முதல்வாரம்தான் பிரதமரையும்,ப.சிதம்பரத்தையும் சந்தித்து,அவர்கள் விடுதலைக்காக மனமுருக வேண்டுகோள் வைத்துவிட்டு வந்தார்.முதுகில் குத்துவது போல இடி போல இந்த செய்தி வந்திருக்கிறது.பேரறிவாளன் மீதான குற்றசாட்டு என்ன தெரியுமா.9 வாட் பேட்டரி வாங்கி சிவராசனுக்கு கொடுத்தாராம்.9 வாட் என்பது டார்ச் லைட்டுக்கு போடக்கூடியது.அதுக்கு எந்த பெட்டிக்கடையில் ரசீது தருகிறார்கள்..?சி.பி.ஐ.அதற்கு ஆதாரமாக பேட்டரி செல் ரசீது காட்டி 20 வருடமாக அவரை அடைத்து வைத்து இன்று தூக்கு தண்டனை வரை கொண்டு வந்துவிட்டது.

ராஜீவ் காந்தி அமைதிபடை என்னும் பெயரில் இலங்கையில் செய்தவை,மற்றும் காங்கிரசின் மறைக்கப்பட்ட உண்மைகளை வீதிக்கு வீதி அம்பலப்படுத்துவோம் என ஆவேசப்படுகிறார் வைகோ.போராடு தலைவா.
---------------------------------------------
அன்னா ஹசாரே வைக்கும் அடுத்தடுத்த ஆப்புகளால் கதிகலங்கி கிடக்கிறது மத்திய அரசு.7 நாள் நிதிமன்ற காவல் என சொல்லிவிட்டு அவசர அவசரமாக ராத்திரியே விடுதலை செய்தது..தப்பிச்சோம்,பிழைச்சோம் என ஓடிப்போவார் என பார்த்தார்கள்.மனுசன் வெளியே போகமட்டேன் என சொல்லிவிட்டு அங்கியே உண்ணாவிரதம் உட்கார்ந்துவிட்டார்.இத என்ன செய்றது என சிதம்பரம் கண்ணாடியை கழட்டிகொண்டு அழுகிறாராம்.அன்னாவை இன்னொரு மகாத்மா ஆக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.ஏங்கய்யா இப்படி சொதப்புறீங்க..?

No comments:

Post a Comment