அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Thursday, August 18, 2011

விஜயகாந்த் வீட்டு திண்ணை, ராமதாஸ் வீட்டில் வெண்ணெய்!


விஜயகாந்த் வீட்டு திண்ணை, ராமதாஸ் வீட்டில் வெண்ணெய்!


சென்னை, இந்தியா:
 தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேறியது பற்றி வெவ்வேறு கதைகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் சமீப நாட்களாக அடிபடத் தொடங்கியுள்ளன. பா.ம.க.வின் வெளியேற்றம் பற்றி யாருமே வியப்பு அடையவில்லை. அது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், அதன் பின்னாலுள்ள காரணம்தான் வெவ்வேறு விதமாகக் கூறப்படுகின்றது.
தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறியதற்காக காரணம் கூறிய பா.ம.க., பொதுவாக திராவிடக் கட்சிகளைச் சாடினாலும், அந்தத் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க. பற்றி பெரிதாக பேசுவதில்லை. ஆனால், தி.மு.க.வை மிகக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியுள்ளது.
“இந்தப் போக்கே, பா.ம.க.வின் அடுத்த திட்டத்தைக் காட்டிக் கொடுக்கிறது” என்கிறார் விஷயமறிந்த அ.தி.மு.க. தலைவர் ஒருவர்.
பா.ம.க. வெளிப்படையாக அணுகாவிட்டாலும், மறைமுகமாக சில தொடர்புகளை அ.தி.மு.க.வுடன் ஏற்படுத்த முயல்கின்றது என்பதை உறுதிப்படுத்தினார் அவர். அ.தி.மு.க.வின் இரு அமைச்சர்கள் மூலமாக, பா.ம.க. தூதுவிட முயற்சிப்பதாகவும் கூறுகிறார் அந்த அ.தி.மு.க. பிரமுகர்.
டாக்டர் ராமதாஸ்மீது பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம், போட்டிருந்த வழக்கு ஒன்று இன்னமும் முடிவடையாமல் நிலுவையில் உள்ளது. அ.தி.மு.க. அரசு, அந்த வழக்குக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று நினைக்கிறதாம், பா.ம.க. தலைமை.
நாம் தொடர்புகொண்ட அ.தி.மு.க. பிரமுகர், “டாக்டர் ஐயா போலீஸ் ஸ்டேஷன் படியேறுவதைத் தவிர்க்கவே, பா.ம.க.வில் இருந்து மிகக் கடுமையான தி.மு.க. எதிர்ப்பு அறிக்கைகள் வந்து விழுகின்றன. இது எமக்கும் நன்றாகத் தெரியும். நமக்கு என்ன? அவர்களாகவே தி.மு.க.வைப் போட்டுத் தாக்குகிறார்கள். நாம், ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்” என்று சிரிக்கிறார்.
அத்துடன் ஒரு லாங்-ஷாட் காரணமும் உண்டாம். விரைவில் வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல்களில் விஜயகாந்த்தின் தே.மு.தி.க. தனியே போட்டியிட நினைத்து, அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியே வந்தால், அந்த இடத்துக்கு விண்ணப்பம் போட விரும்புகிறதாம் பா.ம.க. தலைமை.
அதுவும் சாத்தியமே. காரியம் ஆக வேண்டுமென்றால் பா.ம.க., பாகிஸ்தானுடனும் கூட்டணி  அமைக்க கூச்சப்படாது  என்பது, அவர்களது வரலாறு

No comments:

Post a Comment