அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 15, 2011

காதலர் தின


  0/0  



கணவனுக்கு வந்த காதலர் தின குறுஞ்செய்தியால் மனைவி தற்கொலை



Love-SMSகணவனின் கைத் தெலைபேசியில் காதலர் தின வாழ்த்து குறுந்தகவலாக வந்ததை அடுத்து மனைவி தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வட பகுதி முஸ்லிம் மக்களுக்கு தார்மீகப் பொறுப்பு உண்டு – வலம்புரி

tamil_muslimsயுத்த காலத்தில் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற விவகாரம் இன்றுவரை பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்ற போதிலும், அந்தச் சம்பவம் தமிழ் மக்களின் விருப்பிற்குரியதல்ல என்பதை முஸ்லிம் சகோதரர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றே நம்பப்படு கின்றது.

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க


  0/0  



"அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"



எனக்கு இ மெயிலில் வந்த உரையாடல், சுவராசியம் கருதி இங்கு வெளியீடுகிறேன்.  இதை எழுதியது யார் என்று தெரியவில்லை.  தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.

 

நியாயமான ஒரு கேள்வி                                                        


"ஏம்பா  இந்த  கம்ப்யூட்டர்  படிச்சவங்க  எல்லாம்  நிறைய  சம்பளம்
வாங்கிட்டு,  பந்தா  பண்ணிட்டு  ஒரு  தினுசாவே  அலையுறீங்களே?  அப்படி என்னதான்  வேலை  பார்ப்பீங்க ?" –

நியாயமான  ஒரு  கேள்வியை  கேட்டார்  எனது  அப்பா.

நானும்  விவரிக்க  ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு  எல்லா  வேலையும்  சீக்கிரமா முடியனும்.
அதே  மாதிரி  எல்லா  வேலையும்  அவனோட வீட்டுல
இருந்தே  செய்யணும். இதுக்காக  எவ்வளவு  பணம்  வேணுமானாலும்  செலவு செய்ய தயாரா  இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
 




"இந்த  மாதிரி  அமெரிக்கால்-ல,  இங்கிலாந்து-ல  இருக்குற Bank,
இல்ல எதாவது  கம்பெனி,  "நான்  செலவு  செய்ய  தயாரா இருக்கேன்.
எனக்கு இத  செய்து கொடுங்க  கேப்பாங்க.
இவங்கள  நாங்க  "Client"னு  சொல்லுவோம்.

"சரி"

இந்த  மாதிரி Client-அ  மோப்பம்  பிடிக்குறதுக்காகவே  எங்க
பங்காளிக  கொஞ்ச  பேர  அந்த  அந்த  ஊருல  உக்கார  வச்சி இருப்போம்.  இவங்க பேரு "Sales  Consultants, Pre-Sales Consultants....".

இவங்க போய் Client  கிட்ட பேச்சுவார்த்தை  நடத்துவாங்க.

காசு  கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு  கேள்வி கேப்பான். உங்களால  இத பண்ண  முடியுமா?

அத பண்ண முடியுமான்னு  அவங்க கேக்குற  எல்லாம்  கேள்விக்கும்,  "முடியும்"னு பதில்  சொல்றது  இவங்க வேலை.

"இவங்க  எல்லாம்  என்னப்பா  படிச்சுருபாங்க"?

"MBA, MSனு  பெரிய  பெரிய  படிபெல்லாம் படிச்சி  இருப்பாங்க."

"முடியும்னு ஒரே  வார்த்தைய திரும்ப  திரும்ப  சொல்றதுக்கு
எதுக்கு MBA  படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில்  நியாயம்  இருந்தது.

"சரி  இவங்க  போய்  பேசின  உடனே client project  கொடுத்துடுவானா?"

"அது எப்படி?  இந்த  மாதிரி  பங்காளிக  எல்லா கம்பெனிளையும்
இருப்பாங்க. 500  நாள்ல முடிக்க  வேண்டிய வேலைய 60  நாள்ள
முடிச்சு தரோம், 50  நாள்ல  முடிச்சு  தரோம்னு பேரம்  பேசுவாங்க.
இதுல யாரு  குறைஞ்ச  நாள  சொல்றாங்களோ  அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500  நாள்ல  முடிக்க வேண்டிய  வேலைய 50
நாள்ல எப்படி முடிக்க  முடியும்?  ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்
முடிக்க  முடியாதே?"

"இங்க தான்  நம்ம  புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50  நாள்னு சொன்ன  உடனே client  சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50  நாள்ல  அவனுக்கு  என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது,  என்ன  செய்யனும்னு நமக்கும்  தெரியாது.
இருந்தாலும் 50 நாள்  முடிஞ்ச பிறகு  ப்ரோஜெக்ட்னு  ஒன்ன  நாங்க deliver  பண்ணுவோம்.
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க  கேட்டது  இதுல்ல,
எங்களுக்கு இது  வேணும்,  அது  வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" -  அப்பா  ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க  நம்பியார்  மாதிரி  கைய  பிசஞ்சிகிட்டே
"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த  பணத்துக்கு  நாங்க
வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
சொல்லுவோம்.
இப்படியே 50  நாள்  வேலைய 500  நாள்  ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில்  லேசான பயம்  தெரிந்தது.

"இதுக்கு அவன்  ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு,  பாதி  வெட்டிட்டு வர  முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க  கைல வந்த உடனே என்ன  பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம்  உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
இவரது தான் பெரிய  தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான்  பொறுப்பு."

"அப்போ இவருக்கு  நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்
தெரியும்னு சொல்லு."

"அதான்  கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற  எதுவும்யே  தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா  குழம்பினார்.

"நாங்க  என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து  கைய  நீட்டுவோம். எப்போ எவன்  குழி பறிப்பானு  டென்ஷன் ஆகி  டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா  இவரு ரொம்ப  நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும்  இவரு  கிட்ட  போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும்  தீர்த்து  வச்சிடுவார?"

"ஒரு  பிரச்சனைய  கூட  தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும்  தலையாட்டிகிட்டே  உன்னோட பிரச்னை
எனக்கு  புரியுதுனு சொல்றது மட்டும்  தான் இவரோட  வேலை."

"நான் உன்னோட  அம்மா  கிட்ட  பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட்,  மோடுல் லீட்,  டெவலப்பர், டெஸ்டர்னு
நிறைய அடி  பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து,  எல்லாரும் ஒழுங்கா  வேலை செஞ்சா
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா  தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு,  அவங்க மட்டும் தான்  எல்லா  வேலையும் செய்வாங்க.  அதுலையும் இந்த  டெவலப்பர்,வேலைக்கு  சேரும் போதே  "இந்த  குடும்பத்தோட  மானம்,  மரியாதை உன்கிட்ட தான்  இருக்குனு"
சொல்லி, நெத்தில திருநீறு  பூசி அனுப்பி வச்ச  என்னைய மாதிரி
தமிழ்  பசங்க  தான் அதிகம்  இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ  சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா  வேலை?"

"இந்த டெவலப்பர்  பண்ற வேலைல  குறை  கண்டு  பிடிக்கறது
இவனோட வேலை.

புடிக்காத  மருமக  கை பட்டா  குத்தம்,
கால்  பட்டா  குத்தம்  இங்குறது  மாதிரி."

"ஒருத்தன் பண்ற  வேலைல  குறை  கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி  இவங்களாவது வேலை செய்யுராங்களா.
சொன்ன தேதிக்கு  வேலைய  முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது  எப்படி..?  சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,
அந்தக் குற்ற உணர்ச்சி  எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு  அந்த  அவமானத்துக்கு  பதிலா  தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்?

ஏன் லேட்னு  கேள்வி  கேக்க  மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான்.  இது  வரைக்கும் டிமுக்குள்ளையே
காலை வாரி  விட்டுக்கிட்டு இருந்த நாங்க  எல்லாரும்  சேர்ந்து அவன் காலை  வார  ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ  கொடுத்த  கம்ப்யூட்டர்-ல ஒரே  தூசியா  இருந்துச்சு.
அன்னைக்கு டீம்  மீட்டிங்ல வச்சி  நீ  இருமின,
உன்னோட ஹேர்  ஸ்டைல் எனக்கு  புடிகலை."
இப்படி எதாவது  சொல்லி அவன  குழப்புவோம்.
அவனும் சரி  சனியன  எடுத்து  தோள்ல  போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள்  தூங்கிட்டு  போகட்டும்னு  விட்டுருவான்".

"சரி  முன்ன  பின்ன ஆனாலும்  முடிச்சி  கொடுத்துட்டு கைய
கழுவிட்டு  வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா,  நம்ம  நாட்டுல பாதி  பேரு  வேலை இல்லாம
தான்  இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ  பயங்கரமான
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும்,  அவனால  அத  புரிஞ்சிக்க
கூட  முடியாதுங்கற  மாதிரியும் நடிக்க  ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து  போய்,
"எங்கள தனியா  விட்டுடாதீங்க.  உங்க  டீம்-ல  ஒரு ஒன்னு,  ரெண்டு
பேர  உங்க  ப்ரொஜெக்ட பார்த்துக்க  சொல்லுங்கன்னு"

புது பொண்ணு  மாதிரி  புலம்ப  ஆரம்பிச்சிடுவாங்க."
இதுக்கு பேரு "Maintenance and  Support".
இந்த வேலை  வருஷ கணக்கா  போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது  ஒரு  பொண்ண  கல்யாணம்  பண்ணி  வீட்டுக்கு
கூட்டிட்டு  வர்றது  மாதிரி.

தாலி கட்டினா மட்டும்  போதாது,  வருஷ  கணக்கா  நிறைய  செலவு  செஞ்சு பராமரிக்க வேண்டிய  விசயம்னு..."  இப்போ  தான்  கிளைன்டுக்கு
புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா".

குறும்படம்


மகனிடம் சுட்ட குறும்படம் .......... நடந்தது என்ன ...... என்ன 

http://www.youtube.com/watch?v=PyyUjntDmCY

மேலே உள்ள தொடுப்பைக் கிளிக் பண்ணிப்பாருங்கள்..
..என்ன ட்விஸ்ட்..??? நல்ல டைரக்சன்.... டைரக்டர் நளன்..

பாருங்க..பாருங்க.

திருடிகள் ஜாக்கிரதை


திருடிகள் ஜாக்கிரதை....

அய்...விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு வந்திருச்சே...போன வாரம் ஈரோட்ல ஒரு வேலை...

எங்களுக்கு ஈரோடுதான் செல்லம்....சாப்பிங் ஆகட்டும்......ஆஸ்பிட்டல் ஆகட்டும்..எல்லாம் அங்கேதான்...போகும்போது ஒரு லிஸ்டே இருக்கும்..

அன்னிக்கும் அப்ப்டித்தான்...மிக்ஸி ரிப்பேருக்கு கொடுக்க கையில் கனத்துடன்...ஒரு பிக் சாப்பரில் உட்கார்ந்திருந்தது.....அதாங்க...கட்டப்பையின்னுவாங்களே அதுதான்..

அப்பத்தான் வூட்டுக்கடன் பணத்த வங்கியில கட்டிவிட்டு காலியான்..??? பெரிய கேஸ்பேக்கும் அதில் செலவுக்கு கொஞசம் பணம்...ஒரு செல்போன்..அவ்வள்வுதான் இருப்பு...

இரண்டு பெண்கள் பயர்சர்வீசில் ஏறினார்கள்...என்னருகே ஒருத்தி நின்று கொண்டாள்...என் பை இருவருக்கும் நடுவிலிருந்தது...ஏனோ சரியாக நிற்காமல் நெளிந்து கொண்டே இருந்தாள்...

பார்க் வருவத்ற்குள் ஏதோ சந்தேகத்தில் பையை திறந்துபார்த்தேன்..கேஸ்பேக் கானோம்...சந்தேகமே இல்லை....இவள்தான் காலாலேயே எத்தி எடுத்திருக்கிறாள் என்று பட்டது...

“ என் பேக காணொம்...நீதான் எடுத்திருக்கிறாய்....மரியாதையாக் குடுத்திரு” ...ன்னு சத்தம் போட்டேன்....

கண்டக்டர் எங்கள் இருவரையும் ஒருமுறை நிமிர்ந்துபார்த்துவிட்டு கடமையே கண்ணாக....???? டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்...

அவள் ”என்ன இந்தம்மா லூஸ் மாதிரி பேசுது”என்று யாரையோ பார்த்து சொன்னாள்....எனக்கு கோபம் வந்துவிட்டது.......நான் விடவில்லை...”நானாடி லூசு....வா போலீஸ் ஸ்டேசன் போகலாம்”எத்தனி பேருடி இருக்கிறீங்க பஸ்ஸுக்குள்ள” என்றேன்...

அவளையும், உடன் வந்தவளையும் புடைவையை உதறிக்காட்டச்சொன்னேன்.....ஒன்றும் இல்லை....இனி என்ன செய்வது....

“டிரைவர் வண்டியை ஸ்டேசன்ல நிறுத்துங்க...கண்டிப்பா என் பேக பஸ்ஸுக்குள்ளதான் இருக்குது யார்கிட்டயோ...”. 

அதில இப்பகட்டுன பேங்க ரசீது மட்டும்தான் இருக்குது.....பணமெல்லாம் இல்லை...செக் பண்ணிடலாம்” என்று சப்தம் போட்டேன்..

அமைதியோ அமைதி....இரண்டு நிமிடத்தில் நாலுசீட் பின்னால் இருந்த ஒரு பெண் சத்தம் போட்டார்...”ஒரு பேக் இங்க கிடக்குது....உங்களுதா பர்ருங்க”

என் பேக்கேதான்....எப்படி கை மாத்திருக்காங்காங்க..பாருங்க...பணம் ஒன்றும் இல்லை...என்றதும் கீழே வீசிட்டாங்க.....யோசித்துப்பார்த்தேன்...கிடைச்சுருச்சு...இனி என்னானு புகார் தருவது...

சாட்சி யாருன்னு கேட்பாங்களோ...ஒருத்தரும் வரமாட்டாங்க...பேக கிடைத்த நிம்மதியுடன் அமைதியாகிவிட்டேன்...அலட்டிக்காம அவங்களும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப்போய்ட்டாங்க...

டிஸ்கி:...இதனால் தெரிந்துகொள்ளவேண்டிய நீதி என்னவென்றால் பிக் சாப்பரில் பர்ஸ் போன்ற பொருள்களை வைக்காதீங்க...பெண் திருடிகளும் நிறைய இருக்காங்க...அவங்க தனியா வரமாட்டாங்க.. எடுத்ததும் அடுத்த ஆளுக்கு கை மாத்திடறாங்க.. அது பஸ் ஆக இருந்ததாலும் நான் உடனே பார்த்துவிட்டதாலும் பரவாயில்லை...

இதுவே பொது இடங்கள் நெருக்கமான விழாக்கூட்டங்கள் போன்றவற்றில் நாம்தான் ஜாகிரதையாக இருக்கவேண்டும்..அடிக்கடி நம் நகைகள் கழுத்தில் இருக்கிறதா என்று செக் செய்யவேண்டும்...சிறு குழந்தைகளுக்கு நகைகள் அணிந்து எடுத்துச் செல்வதை தவிர்க்கவேண்டும்..

 பஸ்களில் இதுபோல் நடந்தால், .சந்தேகப்பட்டால் சும்மாவாச்சும் போலீஸ்....போலீஸ் என்று கூவுங்கள்...நிஜமாவே அவங்க திருடவில்லை என்றால் என்ன உண்டு இல்லை என்று பண்ணியிருப்பாங்கதானே...மொசப்புடிக்கிற நாய மூஞ்சியப்பார்த்தா தெரியாதா என்று கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவார்....அத வொர்கவுட் பண்ணிப் பார்த்தேன்..நிஜமாப்போச்சு.......

அதேமாதிரி பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போது நம்மை இடித்துக்கொண்டு பதினைந்துவயது பசங்கள் பெண்கள் வழியில் ஏறுவார்கள்....அவ்ர்களின்குறியும் இதே பிக்சாப்பர்தான்...படக்கென்று கைவிடுவார்கள்...நாம் உசாராக என்னவென்று கேட்டால் தெரியாமல் பட்டுருச்சு என்று சொல்லி சட் என்று அந்த இடத்த விட்டு நகர்ந்து விடுவார்கள்.....சும்மாவா சொன்னாங்க...தூங்கும்போதுகூட கால ஆட்டிக்கிட்டு தூங்கணும்....இல்லாவிட்டால் அதோகதிதான்...

இது நிஜம் தானா



சோனா, இது நிஜம் தானா?

"என்னய்யா அக்கிரமமாயிருக்கு! எவனோ ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கப்போறேண்ணு மெரட்டிக்கிட்டிருக்கான். எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறீங்களே?" என்று எரிந்து விழுந்தபடி கூட்டத்தை விலக்கியபடி முன்னேறினேன்.

"யோவ்! அவன் கையிலே தீப்பெட்டி வச்சிருக்கிறான். சட்டை பேண்டேல்லாம் மண்ணெண்ணையிலே தொப்பலா நனைஞ்சிருக்கு. பக்கத்துலே போயிராதே! நீ வேறே அசப்புலே தீக்குச்சி மாதிரியே இருக்கே!"

கொஞ்சம் பீதியாகவே இருந்தாலும், அடக்கிக்கொண்டு அவனை நோக்கி அடிமேலடி எடுத்து வைத்தேன்.

"பக்கத்துலே வர்றாதே! நான் தற்கொலை பண்ணிக்கப்போறேன்!"

"வரலை ராசா வரலே! அட எடுபட்ட பயலே, இப்படி கிருஷ்ணவேணி தியேட்டருக்கு முன்னாலே கிருஷ்ணாயிலை உடம்பெல்லாம் ஊத்திக்கிட்டு கையிலே தீக்குச்சியோட நிக்குறியே! எதுக்காகத் தற்கொலை பண்ணிக்கப்போறேன்னு சொல்லிட்டாவது செய்யலாமில்லே? நாளைக்கு இத வச்சு ஒரு இடுகை போட்டு நானும் பொழச்சுக்குவேனில்லே?"

"அப்படீன்னா நீதான் சேட்டைக்காரனா?"

"எப்படி ராசா கண்டுபிடிச்சே?"

"பின்னே, என்னைப் பத்தி புத்திசாலியா இடுகை போடுவாங்க?"

"சே! முதல்லே என் வாயிலே குடியிருக்கிற சனியனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பணும். அதை விடு, இப்போ எதுக்குத் தற்கொலை பண்ணிக்கப்போறே, அதைச் சொல்லு!"

"ரெண்டு நாளைக்கு முன்னாலே கலைமாமணி விருது கொடுத்தாங்க தெரியுமா சேட்டை?"

"ஓ! நல்லாத் தெரியுமே! அனுஷ்கா, தமன்னா, ஆர்யா உள்பட 74 பேருக்கு கலைமாமணி விருது கொடுத்திருக்காங்க! அதுக்கென்ன இப்போ? உனக்குக் கொடுக்க மறந்திட்டாங்களா? அதுக்காக நீ செத்துட்டா உனக்கு கலைமாமணி கிடைக்காதப்பு; தற்-கொலைமாமணி விருது தான் கிடைக்கும்!"

"சும்மாயிரு சேட்டை! வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சாதே! எனக்குக் கொடுக்காட்டியும் பரவாயில்லை! ஆனா சோனாவுக்குக் கொடுக்காம அநீதி இழைச்சிட்டாங்களே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"

"என்னது சோனாவா? யாருய்யா அது?"

"நடிகை சோனா யாருன்னா கேட்கறே? நீ அடுத்த பிறவியிலே உ.பியிலே டி.எஸ்.பியாத் தான் பொறக்கப்போறே!"

"அப்படியெல்லாம் சாபம் போட்டுராதே! என்னோட ஷூவையே நான் துடைக்கிறதில்லை; மாயாவதி ஷூவையெல்லாம் எப்படித்துடைக்கிறதாம்? சோனாவுக்கு எதுக்கு கலைமாமணி கொடுக்கணும்? அவங்களுக்கும் கலைக்கும் என்ன தொடர்பு? தெரியாமக் கேட்கிறேனப்பு...."

"என்னய்யா பெரிய தொடர்பு? எங்க சோனா ஹைடனைப் பத்தி என்னன்னு நினைச்சே? கலைஞர் வீட்டுக்குப் போயி நேருக்கு நேரா சந்திச்சு, போட்டோவெல்லாம் எடுத்திருக்காங்க தெரியுமா? இதோ பாரு!"


"அட ஆமா, அவரு வீட்டுக்கு எல்லாராலேயும் போக முடியுமா என்ன, இவ்வளவு பக்கத்துலே உட்கார்ந்துக்கிட்டு போஸெல்லாம் கொடுத்ததுக்கப்புறமும் கலைமாமணி கொடுக்கலியா? இது உண்மையிலேயே பெரிய அநீதி தானப்பு..!"

"சும்மா ஒண்ணும் போகலே! சொளையா அஞ்சுலட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கியிருக்காங்க தெரியுமா?"

"என்னது, அஞ்சு லட்சமா? அதுக்கு தமிழ்நாட்டுலே ஒரு குடும்பத்துக்கேடாக்டர் பட்டம் கிடைக்குமே?"

"டாக்டர் பட்டமெல்லாம் எங்க தலைவிக்கு எம்மாத்திரம் சேட்டை? அவங்களுக்கெல்லாம் ஒரு மரியாதையிருக்கு! அவங்க எவ்வளவு புரட்சிகரமான சிந்தனையுள்ள பெண் தெரியுமா? அவங்க வாயைத் திறந்தாப்போதும், உடனே இந்து மக்கள் கட்சி சிவசேனாவெல்லாம் போராட்டத்துலே இறங்கிருவாங்க! அவ்வளவு புதுமையான சிந்தனையுள்ள பெண்மணி அவங்க!"

"இத பாரப்பு, சிவசேனாவையெல்லாம் தமிழ்நாட்டுலே யாரும் சீரியஸா எடுத்துக்கமாட்டாங்க, இப்போ காதலர் தினம் கொண்டாடக்கூடாதுன்னு மதுரையிலே ஆர்ப்பாட்டம் பண்ணினாங்க தெரியுமா? அதுலே மொத்தமே முப்பது பேரு தான் இருந்தாங்களாம். அதுலேயும் இருபத்தி ஒன்பது பேரு போலீஸுன்னு பேசிக்கிறாங்க!"

"அப்படீன்னா புரட்சிப்பெண்களுக்கு தமிழ்நாட்டுலே மரியாதையே கிடைக்காதா?"

"எப்படிக் கிடைக்கும்? நாலு கோர்ட் ஏறி எறங்கியிருக்கணும். நாப்பது கேசு பார்த்திருக்கணும். தமிழ்ப்பண்பாடு, கலாச்சாரம், இப்படி எதுனாச்சும் பேசியிருக்கணும். அந்த மாதிரி ஏதாவது பண்ணியிருக்காங்களா?"

"ஓ! நிறையவே பேசியிருக்காங்க சேட்டை! ஆண்களை நம்பாதே ஆனால் ஆண்களில்லாமல் வாழ முடியாதுன்னெல்லாம் நிறையத் தத்துவங்களைக் கண்டுபிடிச்சுச் சொல்லியிருக்காங்க. இதுக்காகக் கூட நொந்த மக்கள் கட்சி, அதாவது இந்து மக்கள் கட்சி போராட்டமெல்லாம் நடத்தியிருக்காங்க!

"அட, இவ்வளவு பெரிய ஆளா அவங்க? ஒருவேளை தமிழ் தெரியாதுன்னு கலைமாமணி கொடுக்காம விட்டுட்டாங்களோ?"

"ஆமாம் அவங்க ஆங்கிலோ இந்தியப்பொண்ணுதான்! ஏன் கொடுக்கக்கூடாதா? தமன்னா தமிழ்ப்பொண்ணா, அனுஷ்கா தமிழ்ப்பொண்ணா? தமிழ் சினிமாவுலே நடிக்க சரக்கே வேண்டாமுன்னு சொன்னா ஆர்யா தமிழனா? அவங்களுக்கெல்லாம் கொடுக்கும்போது இவங்களுக்கும் கொடுத்தா என்னவாம் சேட்டை?"

"கரெக்டு தான்! செலவோட செலவா சோனாவுக்கும் ஒரு கலைமாமணி கொடுத்திருக்கலாம். அவங்களும் நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன் கூட போட்டோ எடுத்துக்கிட்டிருப்பாங்க! தமிழ் இலக்கியமும் வளர்ந்திருக்கும். ஒரு நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாங்க!"

"எல்லாத்தையும் கூட விட்டிரலாம் சேட்டை! ஆனா....ஆனா...," என்று குமுறிக்குமுறி அழுதார் அவர்.

"அழாம சொல்லுய்யா! இன்னும் என்ன...?"

"சோனா ஒரு தமிழ்ப்படம் எடுக்கிறாங்க! அதுக்கு ’கனிமொழி’ன்னு பேரு வச்சிருக்காங்க! அதோட பாடல்களைக் கூட கலைஞர் வெளியிடுவார்னு சொல்லிட்டிருந்தாங்க!"

"என்னது?" நான் அதிர்ந்தேன். "தம்பி, நீ கடைசியா சொன்னதைக் கேட்டதுக்கப்புறம் எனக்கே சோனா மேலே ஒரு பரிதாபம் வந்திருச்சு! ஆனா, அதுக்காக நீ சாகணுமா? நம்ம நாட்டுலே கண்டனம் தெரிவிக்க எத்தனையோ வழியிருக்கே? உதாரணத்துக்கு நம்ம மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுஹாண் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறதுக்காக, இருபது நிமிஷம் உண்ணாவிரதம் இருந்தாரு! நீங்களும் ஒரு அரை மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து அவரோட ரிகார்டை பிரேக் பண்ணியிருக்கலாமே?"

"அவரோட ரிகார்டை என்னாலே எப்படி பிரேக் பண்ண முடியும் சேட்டை?"

"ஏனப்பு, ஒரு அரைமணி நேரம் சாப்பிடாம இருக்க முடியாதா?"

"அது முடியும். ஆனா, அவரோட இருபது நிமிஷ உண்ணாவிரதத்துக்கு ஆன செலவு ரெண்டு கோடி ரூபாய்.அதுக்கெங்கே போவேன்?"

"ஓஹோ! இப்படியொண்ணிருக்கோ?"

"இப்போ சொல்லு சேட்டை! எங்க தலைவி சோனாவுக்கு கலைமாமணி தராதது எவ்வளோ பெரிய கொடுமை? இது தெரியாம ஜெயகாந்தன்கூட ’இது தமிழர்களுக்கு பொற்காலம்,’னு சொல்லியிருக்காரே?"

"அதையெல்லாம் சட்டை பண்ணாதீங்க! ஜெயகாந்தன் "இது எனக்கு பொற்காலம்,"னு உண்மையையா சொல்ல முடியும் பாவம்? அதான் நம்ம முதல்வரே சொல்லிட்டாரே! அடுத்தவாட்டி கலைஞர் முதல்வரானா ஒவ்வொரு வருஷமும் 225 பேருக்கு கலைமாமணி விருது தருவாராம். அப்புறம் நீயும் கலைமாமணி; நானும் கலைமாமணியாயிடுவேன்."

"ஊஹும்! அதெல்லாம் செல்லாது! எங்க தலைவிக்கு இப்பவே கலைமாமணி வேணும். இல்லாட்டா நான் சாகப்போறேன்!"

"உம் சரி, நான் இவ்வளவு சொல்லியும் கேட்கலேன்னா என்ன பண்ணுறது? சரி, உன் இஷ்டம் போல சாவு!"

"இதை முதல்லேயே சொல்லியிருக்கலாமில்லே சேட்டை? பாரு, என் டிரஸெல்லாம் காய்ஞ்சு போச்சு! இரு இன்னும் ரெண்டு பக்கெட்டிருக்கு! அதையும் ஊத்திக்கிறேன்!"

"அடக் கிறுக்கா! தீக்குளிக்கிறேன்னு சொல்லிட்டு என்னடா வாளியிலே இருக்கிற தண்ணியை தலையிலே ஊத்திக்கிறே?" நான் அதிர்ந்தேன்.

"நல்லாப் பாரு சேட்டை! ரெண்டு சிவப்பு வாளியிலேயும் என்ன எழுதியிருக்கு? ’தீ’ன்னு தானே எழுதியிருக்கு? இதோ நான் தீக்குளிக்கப்போறேன்! தீக்குளிக்கப்போறேன்!"

ஐயோ சாமீ! இம்புட்டு நேரம் ஒரு லூஸோடவா பேசிட்டிருந்தேன்?

அரியவகை உயிரினங்கள்

சமுத்திரப்பசு






தமிழகத்தின் தென் கிழக்குப்பகுதியான ராமேஸ்வரத்தில் இருந்து,கன்னியாகுமரி வரை உள்ள இந்திய எல்லைக்கு உட்பட்ட‌ மன்னார்வளைகுடா கடற்பரப்பு ராட்சத அலைகளற்ற அதிக ஆழமில்லாத அமைதியான கடற்பகுதி.

கடல் வாழ் உயிரினங்கள்,கடற்தாவரங்களின் சரணாலயம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.இங்கு அரிய கடல் வகை தாவரங்கள்,உயிரினங்கள் அதிகம் காணப்படுகின்றது.மீனினங்கள் மட்டும் 400 வகைகளுக்கும் மேலாக கிடைக்கக்கூடிய மீன்வளமிக்க கடற்பரப்பு பகுதி இது.தமிழ்நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 20% மீன்கள் இங்குதான் பிடிக்கப்படுகின்றது.

மன்னார் வளைகுடா பகுதியில் ஆராவாரமற்ற அலைகள் இருப்பதால் இந்த அப்பாவி,அப்பிராணிகள் இங்குதான் அதிகளவில் வாழ்ந்து வந்தது சமுத்திரப்பசு என்றும்,ஆவுளியா என்றும் அழைக்கப்படும் .ஆங்கிலத்தில் ( SEA கௌ,SIRENIA )அழைக்கப்படுகின்றது.

கடல் வாழ் தாவரங்களை உண்பதாலும்,மிகவும் அமைதியாக சாந்தமாக இருப்பதாலும் இதனை சமுத்திரப்பசு அல்லது கடல் பசு என்று பசுவின் பெயர் சொல்லி அழைக்கின்றனர் தென்மாவட்டத்தினர்,மற்றும் மீனவர்கள் ஆவுளியா என்றும் அழைப்பார்கள்.`



படகுகள்,பெரிய வகை மீனினங்கள் இந்த ஆவுளியாவை நோக்கி வந்தால் கடுகள்வேனும் தன் எதிர்ப்பை காட்டாமல்,சுற்றி,சுற்றி தன் எதிர்பாளர்களை வலம் வரும் ஐயோ பாவப்பட்ட பிராணி எனலாம்.

இதன் இறைச்சி அதிக சுவைஉள்ளதால் இதற்கு அதிகம் கிராக்கி உள்ளது.ஒரு கிலோ இறைச்சி சுமார் முன்னூறு வரை விற்பனைசெய்யப்படும்.அன்று ஆவுளியா பிடிபட்டுவிட்டது என்றால் அப்பொழுதெல்லாம் அமர்க்களப்படும்.

இவற்றின் பற்கள் நச்சு முறிவுகளுக்கும்,தலை தலை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும்,இறக்கைப்பகுதி மலசிக்கல் மருந்துக்கும்,தோல் தோல்பொருட்கள் செய்யவும் பயன் பட்டு வந்தது.

இந்த சாதுவான கடல்விலங்கு சுமார் முன்னூறு கிலோவில் இருந்து 450 கிலோவரை எடைகொண்ட கிட்டத்தட்ட ஒரு யானையின்பருமன் உள்ள ஒரு பிரமாண்டமான விலங்காகும்.நாற்பது ஆண்டுகாலம் வரை உயிர்வாழக்கூடியது.

கடல்குதிரை,அட்டை,சங்கு,கடல் ஆமை,சுறா போன்ற அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் இப்பொழுது அழிந்து வரும் ஆபத்தில் இருப்பதால் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட சில கடல் வாழ் உயிரினங்களில் இந்த கடல் பசு முதன்மை வகுகின்றது.

இவற்றைப்பற்றி துப்பு கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்றும் அரசு அறிவித்துள்ளது.கடலில் இப்பொழுது இவ்வகை பிராணி மிகக்குறைந்த அள்வில் இருப்பதால் இதனை உயிர் உள்ள நிலையிலோ,உயிரற்ற நிலையிலோ வைத்து இருந்தால் சட்டப்படி குற்றமாகும்.



சில பகுதிகளில் ரகசியமாக பிடிக்கப்பட்டு,ரகசியமான முறையில் விறகப்பட்டு வரும் அவலம் நடைபெற்று வருகிறது.அரசாங்கம் எவ்வளவோ முன்னெச்சிரிக்கையா இருந்தாலும் மீனவர்களும்,பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் இவ்வகை உயிரினக்கள் காக்கப்படும்.

இதை தடுக்க சட்டரீதியான வழிமுறைகள் இருந்தும் மீனவர்கள் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. கடல்பசுக்கள் இறந்து கரை ஒதுங்கும் போது தான், அவை தற்போது இருப்பதே உறுதி செய்யும் அவல நிலை உள்ளது. இதை பாதுகாக்க மன்னார் வளைகுடா உயர் கோள காப்பக அறக்கட்டளை முன் வர வேண்டும்.

அரிய வகை உயிரினங்கள் அழிய மனிதர்கள் காரணமாக இருக்காமல் அதன் உயிர் காத்து,கடல் வளத்தைப்பெருக்குவது நம் கடமைகளில் ஒன்றாக எண்ணி செயல்படுவோம்.
பொன்னி 








பொன்னி..இந்தப்பெயரைக்கேட்டதும் ஒரு பெண்ணின் பெயர்,கல்கியின் பொன்னியின்செல்வன் என்றுதான் நினைவுக்கு வரும்.நான் சொல்ல வருவதுபொன்னிக்குருவி.ஒரு அழகான,அபூர்வமான,அழிந்து வரும் பறவை இனம்.

பறவை இனங்களிலே அழகான,பிடித்தமான பறவைஇனம் எது வென்றால் நான்பொன்னிக்குருவியைத்தான் கூறுவேன்.அதே போல் இருபத்திஐந்து ஆண்டுகளுக்குமுன் எனக்கு பிடித்த மாமிசமும் பொன்னிக்குருவியின் மாமிசம்தான்.

மழைக்காலங்களில் தோட்டம்,காடுகரைகளில் எங்கிருந்தோ வந்து தஞ்சம் அடையும்அழகிய இந்த சிறு குருவிகளை வேட்டை ஆடி,சிறார்கள்விளையாடி,கறிசமைத்தும்ஆனந்தப்படுவார்கள்.

சிறுவயதில் தோட்டக்காரரிடம் சொல்லிவைத்து வாங்கி வீட்டில் வைத்து அழகுபார்ப்போம்.மொத்தமாக ஒரு வாரத்திற்கும் மேலாக உயிர் வாழ்ந்ததாக சரித்திர ம்இல்லை.ஒன்பது வர்ண நிறங்களுடன் குள்ளமான வாலுடன்,நீளமானகால்கள்,குட்டையான மூக்குடன் பார்ப்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும்இந்த குருவியை indian pitta என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.தமிழில் பலவட்டாரபெயர்களாக பொன்னுத்தட்டான்,கம்பந்தட்டான்,தவிட்டான்,காச்சுஎன்றும்அழைப்பர்.ஒன்பது வர்ணங்களைக்கொண்டதால் இப்பறவைக்கு ஹிந்தியில்நவ்ரங்என்றொரு பெயரும் உண்டு.

குருவியின் உச்சந்தலை மயிரை நடு மற்றும் கட்டை விரலால் கிள்ளித் தூக்கினால்அக்குருவி இடமும்,வலமுமாக ஆடும்பொழுது "பேயாடம்மாபேயாடு!தோட்டக்காட்டில் விட்டுடுவோம்"என்று சிறார்கள் குதூகலக்குரலில்தாலாட்டும் பொழுது இன்னும் வேகமாக இடமும்,வலமுமாக ஆடுவதை நினைக்கும்பொழுது இப்பொழுது பரிதாபமாக உள்ளது.

மழைகாலம் முடிந்ததும் இப்பறவை இனம் வந்த சுவடே தெரியாமல் மறைந்துவிடும்.சென்ற மழைக்காலத்தில் நான் ஊருக்கு சென்று இருந்த பொழுதுபொன்னிக்குருவியை பார்க்கும் ஆவலில் கேட்டு இருந்தேன்.மிகவும் கஷ்டப்பட்டுகொண்டுவந்து சேர்த்தார் தோட்டக்காரர்."இப்போதெல்லாம் குருவி மாட்டுவதேகஷ்டமாக இருக்கு "என்கின்றார் அலுப்புடன்.

எனக்கோ அழிந்து வரும் அந்த பறவை இனத்தை பார்க்க பரிதாபமாகஇருந்தது.அழகான இந்தப்பறவை இனம் உலகில் மனிதர்கள் இருக்கும் வரைஅழிந்துவிடக்கூடாது என்று மனம் பதைபதைக்கின்றதுநான் ரசித்து விளையாடியஇந்த அழகிய பறவை இனத்தை நம் சந்ததிகளும் ரசிக்க வேண்டும் என்ற ஆவல்மிளிர்கின்றதுகுருவியை ஆசைதீர பார்த்தேன்.மென்மையான முடிகளை நீவியபொழுது மனம் சிறுபிள்ளையாகிப்போனதுஉச்சந்தலை முடியை கிள்ளிசந்தோஷமாக பேயாட்டி விட்டு ,வறுத்து சாப்பிட துளியும் மனதில்லாமல் மொட்டைமாடிக்கு பொன்னிகளைத்தூக்கிக்கொண்டு போனேன்.
எதற்கா?
ஜெயசீலன்