அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, February 15, 2011

தொ(ல்)லை காட்சி மனிதர்கள்


தொ(ல்)லை காட்சி மனிதர்கள் 


சி() வீடுகளில் காண்கிறோம்.எப்பொழுது பார்த்தாலும் தொலைக்காட்சியின் ஒலிகாது ஜவ்வைக்கிழிக்கும்ஒரு ஷாப்பிங்கோ,கோவிலுக்கோ,மசூதிக்கோ,சர்ச்சுக்கோசென்றாலும் 'அட,எட்டு மணிக்கு திருமதி செல்வம்போட்டு விடுவானே என்றபதைபதைப்புடன் ஓடி வருவார்கள்.விருந்தினர் வருகையில் கூட கண்கள்தொலைக்காட்சியிலேயே லயித்திருக்கும்.வந்திருப்பவர் இவரைப்போலவே ஆளாகஇருந்தால் ஒகே.அல்லாவிடில் ஏன் தான் வந்தோமோ என்றாகிவிடுவது இந்ததொலைகாட்சி மனிதர்கள் இதனை புரிந்திருக்க மாட்டார்கள்.எதோ நகமும்,சதையும்போல் இந்த காட்சி பெட்டியுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிப்பார்கள்.

படுக்கையில் இருந்து எழுந்ததும் பல் தேய்த்து விட்டு நேரே டிவி ஸ்விட்சில் தான் கைநீளும்மனைவி தரும் காபியை மனைவி முகம் பாராமல் வாங்கி தந்திருப்பதுகாபியா,ஹார்லிக்சா என்பது கூட உணர்ந்திருக்காமல் ஆறவிட்டு பருகி முடித்துகுளிக்க செல்பவர்,அலுவலக உடுப்புடன் மீண்டும் சோஃபாவில் உட்கார்ந்து கொண்டுரிமோட்டில் விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.இல்லத்தரசி காலை டென்ஷனுடன்பரபர வென்று டிபனை செய்து முடித்து,லஞ்சை பாக்ஸில் அடைத்து,பிள்ளைகளைதயார் செய்யும் வேளையில் இவர் ஹாயாக தமிழகத்திற்கு வணக்கம்போட்டுக்கொண்டிருப்பார்.

'அனு,இன்னிக்கு என்ன டிபன்?"

"பொங்கல்"எங்கோயோ தூரமாக மங்கையின் குரல்.

அப்படியே பொங்கலை ஒருதட்டில் வச்சித்தாயேன்.அப்படியே ஸ்பூனும்.."

மனதில் ஓடுவதை முகத்தில் வாசிக்காமல் அங்ஙனமே செய்வாள் பதிவிரதை.

காமெடிடைமில் வடிவேலு கதைப்பதை வாயெல்லாம் பல்லாகபார்த்துக்கொண்டிருந்தவாறே டிபன் வயிற்றினுள் சென்றுவிடும்.

தொலைகாட்சியே கண்ணாக ஷு லேஸ் வரை முடிந்து "அனு வர்ரேன்"ஐயாகிளம்பியும் டிவி ஓசை இறக்காது.

பிள்ளைகள் ஸ்கூல் சென்று,இல்லாளும் உணவருந்தி அதற்கு பின்னாவது ஓசைபோகுமா என்று பார்த்தால்..

ம்ஹும்.."தொட்டால் பூ மலரும்,தொடாமல் நான் மலர்ந்தேன்"எம் ஜி ஆரும் சரோஜாதேவியும் ஆடும் பாடலின் மலர்ந்த பூவின் தேனை (கிண்ணத்தில் எடுத்து)அருந்தஉட்கார்ந்து விடுவாள் நம்ம இல்லாள் .

ம்ம்..அதற்கப்புறம் என்னத்தை சொல்வது?ராணிமகாராணியின் ஆட்சிதான்ஹாலில்.அலுக்கும் வரை பார்த்து விட்டு பெட்டியை அணைத்தாலும் திரும்ப மதியம்தூக்கம் போட்டால் உடல் பெருத்துவிடும் என்ற காரணத்தால் மீண்டும்இந்தியத்தொலைக்காட்சியிலே முதல்முறையாக வந்த படத்தை வாய் மூடாமல்பார்க்கும் பொழுது உள்ளே எத்தனை கொசு,,பூச்சி நுழைந்ததோ..இறைவனுக்கேவெளிச்சம்.

மணி ஐந்தானால் வரிசைக்கட்டிக்கொண்டு கொண்டவனும்,பெற்றதுகளும் வரஅரசனுக்கே முதல் உரிமைஅலுவலக ஆடையுடன் அமர்ந்து விடுவார்.காபி வித்அனுவாக மனைவி முன்னால் காபி டம்ளருடன் நிற்பதை ஒரு நிமிஷகாலம் சென்றுதான் கணித்து கை நீட்டி வாங்குவார்.

"அப்பா..சுட்டி டிவிபார்க்கணும்"

"சிக்ஸ் தேர்ட்டிக்கு எல்லாம் போய்டணும்.மிட்டெர்ம் வருதே சரியாசெல்லமே"போனால் போகிறது என்று பெரிய மனதுடன்(வேறொன்றுமில்லை பெற்றமணம் பித்து) ரிமோட்டை மக்கள் கைகளில் வழங்கி விட்டு ஆஃபீஸ் உடையைமாற்ற அப்பொழுதுதான் சோஃபாவைவிட்டே எழுவார்.

இப்படியாக டிவியின் வாய் மூடும் பொழுது கடிகாரத்தின் சின்ன முள்ளும்,பெரியமுள்ளும் ஒன்றிணைந்து நடுவாக நிற்கும்.

அந்த வீட்டு சோஃபாக்களை பார்க்கவேண்டுமே..?உட்கார்ந்து உட்கார்ந்து ஐயோபாவமாக அழுதுவடிக்கும்.விருந்தினர்கள் வருவதாக் தெரிந்தால் அவசரஅவசரமாகசோஃபா மீது பெட்ஷீட்டை விரித்து மேக் அப் பண்ணும் கூத்தும் நடக்கும்.அந்தளவுக்குசோஃபாவை தேய்த்து இருப்பார்கள்.

பிள்ளைகள் படிக்கும் நேரம் அறைக்குள் தள்ளி கதவை மூடி விட்டுஐயாவும்,அம்மாவும் ஜோடி நம்பர் ஒன் ஆக தம்பதி சகிதம் அமர்ந்து கொண்டு சீரியல்பார்க்கும் கொடுமையை என்னவென்று சொல்லுவது?

ஒரு ஓட்டை பிரிஜ்ஜை வைத்து பத்து வருஷமாக ஓட்டிக்கொண்டு புதிதாக வாங்கநூறு முறை யோசிக்கும் இந்த தொலைக்காட்சி மனிதர்கள் டிவி ரிப்பேர் ஆனவுடனேயே ஒரு தடவை கூட யோசிக்காமல் ஆயிரங்களை அள்ளியோ,கிள்ளியோகொடுத்து பிளாஆஆஆஆஆஆஆட் (அதாங்க பெரீய ஸ்க்ரீன்)வாங்கி பரவசப்படும்கொண்டாட்டம் பார்த்தால் என்னவென்று சொல்லுவது?

போன் பில்லை பற்றி யோசிக்காமல் ஊரில் இருக்கும் அக்காவிடம் "தங்கத்தைபற்றிபேசி உச் கொட்டுவது.அட..தங்கநகையை சொல்ல வரவில்லை."தங்கம்"சீரியலைசொல்லுகின்றேன்.

தொல்லை காட்சியை பார்த்து பார்த்து அசத்தப்போவது யாரு?அவங்க இல்லேங்க.இப்படிப்பார்க்கிறார்களே என்று பார்ப்பவர்களை அசத்திப்போட்டு விடுவார்கள்.

பசங்களை இப்படி ரூமுக்குள்ளார தள்ளிவிட்டு படிக்கிறாங்களா?இல்லையா?உள்ளேநடந்தது என்ன?பரிட்சையில் நல்ல மார்க் வாங்கனுமே?இப்படி அணு அளவும் பயமில்லை.

அது இதுஎது என்று எந்தக்கவலையும் இல்லாமல் பூதக்கண்ணாடி போடாத குறையாக கண்களில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்க்கும் பரவசத்தை என்னவென்று இயம்ப?

சீரியல் பார்க்கும் சுவாரஸ்யத்தில் பிள்ளைகளுக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுக்காப்படாமல் பால் ஆடைபடிந்து கிடக்கும்,ஹார்லிக்ஸை கலக்க்ப்போவது யாரு?


இருங்க..மேலே சொல்லிட்டே போனால் எழுந்து போய்டுவீங்க.எனக்குத்தெரிந்ததைஅடுத்த பதிவுக்கு வாங்க பேசலாம்.

"என்னடா இவள் தொடரும் போட்டுட்டு ஓடுகிறாளே. டீவியில் ஓடும்
கருத்து யுத்தம் பார்க்கவா?"என்று கேட்கிறீர்களா?

"அட..ஆமாங்க..நிஜம்.கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே!!"




டிஸ்கி:கடைசியே கடைசி வரி மட்டும் சும்மாஆஆஆஆஆ பொய்
எல்லாமே சிரிப்புதான்...................................
ஜெயசீலன்

No comments:

Post a Comment