அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Sunday, February 20, 2011

மனிதர்கள் என்றால் யோசிக்கவேண்டும்



மனிதர்கள் என்றால் யோசிக்கவேண்டும்


ந்தியா சுதந்திரம் அடைவதற்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர். இவர்கள் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் மறந்து இந்தியத் தாயின் புதல்வர்கள் என்ற ஒரே எண்ணத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு போராடினார்கள், வெற்றிபெற்றார்கள். அப்போது யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதத்தைப் பார்க்கவில்லை. இது சுதந்திரத்துக்கு முந்தைய நிலை.

னால் இப்போது நிலைமையே வேறு. காரணம் அதன்பிறகு ஏற்பட்ட குழப்பங்கள். அதனால் மேலோர், கீழோர் என பேதம் பார்க்கத் தொடங்கினர். நாளடைவில் மதப் பிரச்னை உருவானது. அன்று தொடங்கிய பிரச்னை இன்றும் தலைவிரித்தாடுகிறது. தேசிய அளவிலான இப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. அதேசமயத்தில் பிராந்திய அளவில் இன்னும் தொடர்கிறது.

மிழகத்தில் அண்மைக்காலமாக ஜாதிய அமைப்புகள் புற்றீசல் போல பெருகி வருகின்றன. இதற்குக் காரணம் முழுக்கமுழுக்க சுயநலமும், தனிப்பட்ட விருப்பு,வெறுப்பும்தான் என்பதில் ஐயமில்லை  - நன்றி எஸ்.ரவீந்திரன்.

 விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மூலைக்குள் முடங்கிக் கிடந்த ஜாதித் தலைவர்கள் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வலம் வரத் தொடங்கிவிட்டனர். 5 ஆண்டு நாடகம் முடிந்துவிட்டது. மீண்டும் கச்சேரியைத் தொடரலாம் என இவர்கள் புறப்பட்டுவிட்டனர்.

 னி இவர்களின் குரல்களை அடிக்கடி கேட்கலாம். கண்ணுக்குத் தெரியாத ஜாதிகள் பற்றிய புள்ளிவிவரங்களுடன் ஒவ்வொரு அரசியல் கட்சிகளைத் தேடி அலைவதுதான் இவர்கள் லட்சியம். தங்களுக்கு இத்தனை சதவிகிதம் வாக்குகள் உள்ளன என்று பீடிகையைத் தொடங்கி, பல லகரங்களை கறப்பது மட்டுமே நோக்கம் எனலாம். இதற்காக எதையும் செய்வார்கள் இவர்கள்.

 ன்றுபட்டுக் கிடப்பவர்களை உசுப்பிவிட்டு பிரிவினைக்கு வழிவகுப்பார்கள். நமது இனத்தாருக்கு சீட் தரவேண்டும் என கூச்சலிடுவார்கள். வேறு வழியின்றி பிரதானக் கட்சிகள் இவர்களையும் தங்களுடைய கூட்டணி எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்வார்கள்.

தில் பலன் பெறுபவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்களே. அந்த இன மக்களுக்காக இவர்கள் எதையும் சாதித்துவிடமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் இத்தனை நாள்களாக இவர்கள் எங்கிருந்தார்கள்? இதுவரை தங்கள் இனத்துக்காக என்ன செய்தார்கள்? என்பதை அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

விலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.
வாக்காளர்கள் ஆகிய நாம் இன வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து சிறந்த வேட்பாளர்கள் யார் என்பதைத் தேர்வு செய்து மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். 

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... 

No comments:

Post a Comment