அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Sunday, February 20, 2011

கலைஞரும், பிரதமரும் சொல்வது உண்மையானால்...?


கலைஞரும், பிரதமரும் சொல்வது உண்மையானால்...?

தமிழகத்தின் சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகளில் கூட்டணிக் கட்சிகளின் இறுதிக்கட்டப் பேச்சுக்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முக்கிய திருப்பமாக
திமுக - பாமக கூட்டணி அமைந்துள்ளது. ஆரம்பத்தில் பாமகவின் கோரிக்கைகளுக்கு திமுக தலைமை போக்குக் காட்டி வந்தாலும், தற்போதுள்ள சூழலின் தீவிரம் புரிந்து, பாமகவிற்கு 31 தொகுதிகள் ஒதுக்கி பாமகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளது திமுக. திமுக தலைமையின் அரசியல் தகமைக்கும், தந்திரோபாயத்தக்கும் எடுத்துக்காட்டான நடவடிக்கை இது என்கிறார்கள்.
யார் யாரை, எப்போது தூற்ற வேண்டும், எப்போது போற்ற வேண்டும் என்பதைத் தெளிவாகச் செய்வார் திமுக தலைவர் கலைஞர்.  அதிமுகவின் கூட்டணி விபரம் குறித்து முழுமையாக வெளிவராத சூழலில் பாமக அதிமுக பக்கம் சார்ந்து விடலாமா என்ற நிலையில், பாமக 35 தொகுதிகள் கேட்டக, 31 தொகுதிகளை ஒதுக்கி, பேரத்தைச் சுமுகமாக்கி, திமுகவின் கூட்டணிப் பலத்தை உறுதிப்பத்திக் கொண்டார். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியுடன் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரவதாகத் தெரிய வருகிறது. பாமக, திமுக, கூட்டு உறுதியாகியுள்ள நிலையில், காங்கிரஸுடனான கூட்டும் உறுதியாகும் என்பதே உண்மை நிலை.
ஏற்கனவே திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே கலைஞரும், பிரதமரும் மாறிமாறித் தெரிவித்து வருகின்றார்கள். இரு கட்சிகளுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் பல இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும்,  தேர்தல் கூட்டு விடயத்தில் இணக்கிப் போவார்கள் என்பதே வெளிப்படை. இவ்வாறு பாமக, திமுக, காங்கிரஸ், வி.சிறுத்தைகள் என்ற முக்கிய கட்சிகளுடன் கூட்டு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், தேர்தல் வெற்றியும் இந்தக் கூட்டணிக்கே என்பதும் உறுதியாகிவிடும்.
இவ்வாறான சூழலில் அதிமுக வின் கூட்டணி முழுமையடையாத போதிலும்,  பலவீனமான கூட்டணியாகவே தற்போதைக்கு தெரிகிறது.  அதிமுவுடனான  தேர்தல் கூட்டணித் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும், மனித நேய மக்கள் கட்சியினருக்கு இடையில், பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி19 தொகுதிகள் கேட்கின்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி 15 தொகுதிகள் எதிர்பார்ப்பதாகத் தெரியவருகிறது. ஏற்கனவே இரு தொகுதிகளுடன் ஒப்பந்தம் கண்ட, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி திடீரென 9 தொகுதிகள் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதிமுக வின் ஒதுக்கீடு பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்படாத நிலையில், உதிரிக்கட்சிகளுடன் பேச்சவார்த்தைகளை மேற்கொண்டிருப்பது, நடிகர் விஜயைஆதரவு சக்தியாக இழுத்துவர முயற்சிப்பது என்பதெல்லாம் நடந்துகொண்டிருந்த போதும்,  அதிமுக கூட்டணி என்பது பலவீனமான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. விஜய்காந்தின் தேமுதிகவிற்கும், அதிமுகவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகின்ற போதும், ஒரு உறையில் இரு வாள்கள் இருக்க முடியாது என்பது போன்ற நிலையிலேயே உள்ளது.
இந்த நிலையில் இருந்து இறங்கி வராது இருப்பதனாலேயே இக் கட்சிகளுக்கிடையில் இதுவரையில் கூட்டு இடம் பெறவில்லை. திமுகவின் கூட்டணி பலமாக அமைந்து வரும் நிலையில், இந்த இரு கட்சிகளின் தலைமைகளும், போர்வாள்கள் எனத் தம்மை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்வதை விட்டு, விட்டுக் கொடுப்புக்களுடன் விரும்பிக் கூட்டணி வைத்துக் கொண்டால் மட்டுமே, வரும் தமிழக சட்டசபைத் தேர்தல் மாற்றம் ஏற்படுத்தும் தேர்தலாக அமைய முடியும் என எதிர் பார்க்கலாம்.  அவ்வாறு அமையாத நிலையில், கலைஞர் கருணநிதியும், பிரதமர் மன்மோகன் சிங்கும், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்துத் தெரிவிக்கும் உடன்பாடுகள் உண்மையானால், எல்லாவித ஊழல்களும் மறக்கப்பட்டு, அல்லது மறைக்கப்பட்டு,  திமுக கூட்டணியின் அதிரடி வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட வெற்றி என்றே சொல்ல வேண்டியுள்ளது
.

No comments:

Post a Comment