இடையன்குடியில் கால்டுவெல் நினைவு இல்லம்- முதல்வர் திறந்து வைத்தார்
நெல்லை மாவட்டம் இடையன்குடியில் மேம்படுத்தப்பட்டுள்ள கால்டு வெல் நினைவு இல்லத்தை முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கால்டுவெல் இல்லம்
திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் வெளிநாட்டு தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் வாழ்ந்து மறைந்த இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து, கால்டுவெல் இல்லம், பதினெட்டரை லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில், இடையன் குடியில் உள்ள கால்டு வெல் நினைவு இல்லத்தை முதல்-அமைச்சர் நேற்று (18.02.2011)சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-
திராவிட மொழிகளின் ஒப்பி லக்கணம் தந்த தமிழறிஞர் கால்டுவெல் வாழ்ந்து-மறைந்த நெல்லை மாவட்டம் இடையன் குடியில் உள்ள இல்லத்தை நினைவில்லமாக மேம்படுத்தி, அதை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மொழியின் தொன்மையும், தூய்மையும், வலிமையும், வனப்பும், கற்றோர் அனைவரை யும் கவர்ந்திழுத்து; உயிருக்கும் மேலென உணரவைத்திடும் தகுதி மிக்கது. அப்படி தமிழால் கவரப்பட்ட வெளிநாட்டவர் மிகப்பலர். அவர்களில் முதன் மையான அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். தமிழ் மொழியின் வளர்ச்சிக் கும், சிறப்புக்கும் கிறித்தவ அறிஞர்கள் ஆற்றியிருக்கும் அரிய பணியை, இந்த இனிய வேளையில் நினைவு கூர்வது எனது கடமையாகும். ``தமிழ் மொழியைப் பொறுத்தவரை, கிறிஸ்தவர்கள் ஆற்றிய பணி பலவகைப் பட்டதாகும். தமிழ் நாட்டுக் கலைச்செல்வத்தை மேலைநாட்டினர்க்குக் காட்டினர் சிலர்.
தமிழ் இலக்கியத்தின் பண்பு களை பாட்டாலும், உரை யாலும் விளக்கியவர்கள் சிலர். இலக்கண வாயிலாக ஆராய்ந்து தமிழின் தொன்மையையும், செம்மையையும் துலக்கினர் சிலர். மேலைநாட்டு முறையில் தமிழ் அகராதியை தொகுத்து உதவினர் சிலர். தொல்லிய தமிழ் வசன நடையில் அறிவுநூல் இயற்றித் தொண்டாற்றினர் சிலர்'' என்று சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
முதன்முதல் அச்சுப் புத்தகம்
இந்திய மொழிகளில் முதன் முதல் அச்சுப் புத்தகம் உண்டா னது தமிழ் மொழியிலேதான். கிறித்தவ மதத்தைப் பரவச் செய்வதற்காகப் பெருந் தொண்டாற்றி வந்த ஏசு சபை பாதிரிமார்கள், முதன்முதலில் தமிழில் அச்சுப் புத்தகம் உண் டாக்கினர். பெஸ்கி என்னும் வீரமாமுனிவர்தான் தமிழில் முதன்முதலில் உரைநடை நூல் இயற்றியவர். முதன்முதலில் தமிழில் அகராதி எழுதியவரும் வீரமாமுனிவரே ஆவார்.
திருக்குறள் போன்ற தலை சிறந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவற்றின் சிறப்புகள் உலகமெங்கும் பரவிட காரணமாக இருந்தவர் ஜி.யு.போப். தமிழ்நாட்டு மக்கள் வழங்கும் நன்கொடையைக் கொண்டு, தனது கல்லறை அமைக்கப்பட வேண்டும் என் றும், தனது கல்லறையில் தன்னை தமிழ் மாணவன் என்று குறிப்பிடப்பட வேண்டும் என் றும் விரும்பியவர் போப்.
மேலைநாட்டு தமிழறிஞர்கள்
தமிழ்-ஆங்கில அகராதியை தயாரித்த ராட்லர்; யாழ்ப் பாணத்திலும், சென்னையிலும் ஆக்கபூர்வமான தமிழ்த் தொண்டு புரிந்த டாக்டர் வின்ஸ்லோ ஆகி யோரும் குறிப்பிடத்தக்கவர்கள். நம் நாட்டுக் கிறிஸ்தவர்களின் தமிழ்த் தொண்டும் சாமானிய மானதல்ல. ``ரட்சண்ய யாத்தி ரிகம்'' என்னும் காவியத்தைப் படைத்த கிருஷ்ணபிள்ளை; ``குறவஞ்சி'' நாடகம் எழுதிய இன்பகவி; ``பிரதாப முதலியார் சரித்திரம்'' எழுதிய வேதநாயகம் பிள்ளை; ``தொல்காப்பிய நன் னூல்'' எழுதிய சாமுவேல் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்டுவெல், 1838-ஆம் ஆண்டில், தமது 24-ஆவது வய தில் மதபோதகராக, சென்னை மாநகர் வந்தடைந்தவர்; பின்னர் நெல்லை பேராயராக பொறுப் பேற்று, பன்னூறு ஓலைச்சுவடி களையும், சங்ககாலத் தமிழ் இலக்கியங்களையும் பயின்றவர்; புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பாண்டியர் காலத் திற்குச் சொந்தமான கயல் சின்னம் பொறிக்கப்பட்ட நாண யங்களைக் கண்டுபிடித்தவர்; நெல்லை வரலாற்றை ஆய்வு செய்து, தமது ஆய்வுகளின் அடிப்படையில், "திருநெல்வேலி சரித்திரம்'' எனும் பெயரில், நெல்லை வரலாற்றை நூலாக எழுதியவர்;
திராவிட மொழிகள்
தமிழ் மொழியை மட்டுமல் லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளையும் கற்றவர்; திராவிட மொழிகளுக் கிடையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து ஆய்வு செய்தவர்; அதன் பயனாக, `திராவிட மொழிகள்' என்னும் சொல்லாக்கத்தை முதன்முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தவர்; அத்துடன், தமிழ் மொழி, "செம்மொழி'' என முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற்கலைஞர் என்றால்; தமிழ்மொழி செம்மொழி யென்று முதலில் முழக்கமிட்ட வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்தான்.
பரிதிமாற்கலைஞர் தமிழ் மொழி செம்மொழியென 1887-ஆம் ஆண்டு குரல் கொடுத்த தற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856-ஆம் ஆண்டில் அறிஞர் கால்டுவெல் தாம் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பி லக்கணம் என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர் பெரும் நூலில், "திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலை பெற்று விளங்கும் தமிழ், தன்னி டையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே அகற்றிவிட்டு தனித்து உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண் டாமல் வளம் பெற்று வளர்வ தும் இயலும்'' என்னும் வரலாறு போற்றும் மகத்தான உண்மை யையும் நிலைநாட்டியவர். அதன்மூலம் செம்மொழித் தமிழின் மேன்மையையும் உலக றியச் செய்தவர்.
கால்டுவெல் நினைவு அஞ்சல் தலை
இவ்வாறு தமிழ்மொழிக்கு மாபெரும் பெருமைகளைச் சேர்த்த கால்டுவெலை போற் றும் வகையில், அண்ணா, தமி ழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று, 1968ஆம் ஆண்டில் நடத்திய 2ஆம் உல கத் தமிழ் மாநாட்டின்போது, சென்னைக் கடற்கரை காம ராஜர் சாலையில் கால்டுவெலின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு; அன்றைய தமிழக மேலவைத் தலைவராக இருந்த எம்.ஏ.மாணிக் கவேலரின் தலைமையில், பன் மொழிப் புலவர் கா.அப்பாத் துரையால் திறந்து வைக்கப் பட்டது.
செம்மொழி எனத் தமிழ் மொழிக்கு மணிமகுடம் சூட் டிய மாமேதை கால்டுவெல் லுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், கோவை மாநகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் கால்டுவெல் நினைவாகச் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட நிகழ் வையும் இந்த வேளையில் நினைவுகூர்கிறேன்.
ரூ.பதினெட்டரை லட்சம் ஒதுக்கீடு
அவற்றை தொடர்ந்து, நெல்லை மாவட்டம், இடையன் குடியில் அவர் வாழ்ந்து மறைந்த இல்லம் நினைவு இல்லமாக மேம்படுத்தப்படும் என 4.2.2010 அன்று அறிவித்து, பழைமை யான அந்த இல்லத்தைச் செப் பனிட்டு சீரமைத்திட ரூ. பதி னெட்டரை லட்சம் நிதி ஒதுக் கீடு செய்து, கால்டுவெல் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக புதுப்பிக்கப் பட்டுள்ளது.
மேலும், ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் கால்டு வெலின் மார்பளவு வெண்கலச் சிலை ஒன்றும் நிறுவப்பட்டு, அந்த நினைவு இல்லம் இன்று திறந்துவைக்கப்பட்டு இருக் கிறது. கால்டுவெல் நினைவு இல்லத்தை மிகச் சீரிய முறை யில் புதுப்பித்து அமைத்துள்ள அலுவலர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.
தமிழ்ப்பணிக்கு உரிய கவுரவம்
அத்துடன் இன்றைய விழா வின் மூலம், கால்டுவெல் வாழ்ந்து மறைந்த இல்லத்தில் இதுவரை தங்கியிருந்த குரு வானவர்கள் தங்குவதற்காக, புதிய இல்லம் ஒன்றைக் கட்டு வதற்கு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 15ஆம் தேதி ஆணையிடப்பட்டது. என் பதையும் மகிழ்ச்சியோடு தெரி வித்துக் கொள்கிறேன். தமிழுக் குத் தொண்டாற்றிய பெரு மக்களை தி.மு.க. அரசு போற்று வதில் என்றும் குறைவைத்த தில்லை என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சான்று.
இவ்வாறு முதல்-அமைச்சர் கூறினார்.