அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Tuesday, December 14, 2010

புதுக் கவிதை

             கண்கள்


காதலுக்கும் கண்ணில்லை
கடவுளுக்கும் கண்ணில்லை
இருப்பாயின் இப்பூவுலகில்
மாந்தர் பலர் உயிர் வாழ்வதில்லை

ஒரு ஏழை சிறுவனின் கேள்வி

பல்லி சொல்லும் பலனை
பஞ்சாங்கத்தில்
பார்க்க தெரிந்த என் தந்தைக்கு
நான் பள்ளி செல்லும் பலன் மட்டும்
தெரியாமல் போனதெப்படி?

வார்த்தை பூக்கள்

வார்த்தை பூக்கள் பூத்தன
ஆயிரம் என் மனதில்
கோர்த்து வைத்து தேடினேன் உன்னை
அருகினில் நீ வந்த போது
நாணம் தடுத்தது மாலையிட
வெட்கப்பட்டு உனக்கு சூடாமலே
காய்ந்து கிடக்கிறது
பல வார்த்தை மாலைகள்
என் மன தோட்டத்தில்.....







Monday, December 6, 2010

Wednesday, December 1, 2010

கிறிஸ்தவ பாடல்கள்

http://www.tamilchristiansongs.org/

http://www.manavai.com/
http://tcsong.com/
http://www.salvationtv.in/
http://www.tamilchristianradio.org/

கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் சினிமா

ஆங்கில செய்திகள்

தமிழ் செய்திகள்

இதுஇளைஞர்களின் சக்தி

 உன்னுள் நீ புதையாலக புதைந்து கிடைக்கிறாய்
> அதை
> நீ தேடிப்பார்பதும் இல்லை .
> உன்னுள் நீ விதைகளாக இறைந்து கிடைக்கிறாய்
> அதற்கு ,
> நீ நீர் ஊற்றுவதும்
> இல்லை .
> உன்னுள் நீ கற்கள்ளாய் வாழ்கிறாய் ,
> அவைகளை
> நீ சிற்பமாக்குவதும்
> இல்லை .
> உனக்குள்ளோவும் கடவுள் வாழ்கிறார்,
> ஆனால்
> அதை நீ ஓரு நாளும் வணங்கியதில்லை .
> உனக்குள்ளோவும் எல்லாமே இருக்கிறது
> இருந்தும் மற்றவை குறை கூறுகெண்டு காலத்தை வீணாகுகிறாய்.
> அற்பனாக வாழ்வதை விட சிற்பமாகி இறப்பது மேல்
> இப்படிக்கு ஒரு அற்பன்.
> நம்பிக்கை இழக்காதே கத்தி முனையில் கயற்றில் நடப்பது போல் வாழ்க்கைப் பாதை
> மிகவும் கடினமானது தான், என்றாலும் எழிந்திரு, விழித்துக் கொள்,
> மனம் தளராதே
> நீ அடைய நினைத்த உனது இலட்சிய குறிக்கோளை நோக்கி நடைப்போடு

> வெற்றி உன்னை வாழ்த்தி வறவேற்க்கும்.

> நீ எதை நினைத்து உன் மனதில் விதைக்கிறாயோ
> அதுவாகவேஆகிறாய்
> நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால்
> பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.
> நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால்
> வலிமையுடையவனாகிவிடுகிறாய்.
நன்றி !!!
கு. ஜெயசீலன்

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா
கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக்
கொண்டிருப்பதை விடுங்கள்.
* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* விட்டுக் கொடுங்கள்.
* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்..
* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை
இங்கும் சொல்வதை விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.
* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா
இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.
* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும்
மறக்கதிர்கள்.
* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல்
நடந்து கொள்ளாதிர்கள்.
*  பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும்
தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று
காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.

மாத பாடல்


கு. ஜெயசீலன்

மாத போட்டோ





இறைவன்  உங்களை என்றும் ஆசிர்வதிபராக !!!




படம்

Tuesday, November 30, 2010

*ஆசை*

*ஆசை*
    கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய்
விட்டது. கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார். வியாபாரி
நடந்ததைக் கூறினான். துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''
*வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.*
*“அங்கம் பருத்துவிட்டால் அழகுக் கலைகளுக்கே*
*பங்கம் வருவதுபோல் பணமும் ஒரு பக்கம்*
*சேர்ந்து கொண்டே போனால் சீரான சமுதாயம் அழகிழந்து போகுமடி….”*
*----இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.*
நன்றி !!!
 கு. ஜெயசீலன்.

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, நீ அதுவாக மாறுவாய்

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, நீ அதுவாக மாறுவாய்
     
 *நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்*
      முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிராத்தனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் *அபிரஹாம் லிங்கன்*. கூட்டம் முடிந்ததும், *“உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையைஉயர்த்துங்கள்”* என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, அபிரஹாம் லிங்கன் மட்டும்  பேசாமல் நின்றார். *“அபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?”* என பாதிரியார் கேட்க,தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், *“நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” * என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம். *“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ,அதுவாக மாறுவாய்” *என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.
      1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை,
*“தோல்விகளின் செல்லக் குழந்தை”* என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே *தாயை இழந்தார்*. ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப்பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.
       சோர்ந்து போயிருந்த லிங்களை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாரா புஷ். ‘ஆட்சிப பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப்
பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. *“நீ எதுவாக  விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!”* என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!
          இப்போது லிங்கனுக்கு தன் இலக்கு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை
வியபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, *1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்*. அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து *1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்*. *ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!*.
        *இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்!* 1835ல் அவரின் காதலி *‘ஆனி’* விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள் மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால்தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.
    அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும்  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.

*“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்”** என்பது அபிரஹாம்
லிங்கனுக்கு மட்டுமல்ல… நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக
விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி
திருமந்திரம்.*

இது என் முதல் பதிப்பு !!!

அணைவருக்கும் வணக்கம் .