கள்ளக்காதல் சில!! நொறுங்கும் இதயம் பல.!!
"காதலில் ஏது நல்ல காதல்..கள்ளக் காதல்?"
அட ...அதானே..என்ன ஒரு அற்புதமான தத்துவம்...:)) நம்ம புர(ச்சீ ..) இயக்குனர் சாமி சொன்னது தான் இது :))
காதலை உண்மையில் தரம் பிரிக்க தான் முடியுமா? வடிவேலு காமடி ஒன்றில் தற்கொலைக்கு முயலும் 'அல்வா வாசு" சொல்லும் வசனம் "காதல்னு வந்துட்டா..இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தா என்ன, &%$@*!#@*&^ இருந்தா என்ன "? :))கிழபோல்டு சல்மான் ருஷ்டிக்கு இளசுகள் மேலே வரும் காதலும்(?!),அமரத்துவம் வாய்ந்த அமராவதி,அம்பிகாவதி காதலும் ஒரே அலைவரிசையில் தான் பொருத்தி பார்த்து காதல்னு (?!) முடிவு பண்ணனுமா?
மதுரை லாட்ஜுகளில் மட்டும் கடந்த ரெண்டு மாதங்களில் மூணு பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்காங்க.நகைக்காகவோ ,பணத்துக்காகவோ....ன்னால் அது தான் இல்லை. தன் புருஷன்,குழந்தைகளை விட்டுட்டு கள்ளகாதலனுடன் ஓடி வந்த அபலை(?!)கள்!! இருப்பதை விட்டுட்டு,பறப்பதற்கு ஆசைப்பட்டு வந்த இந்த காதல் தேவதைகள் ,அதே கள்ள உறவாலேயே கொல்லப்படுவதும் இன்னொரு வேதனை...
நல்லக்காதல் ....ன்னால் ...ன்னால்...னால் ...ல்.....
அட! அது பற்றி தான் ஷேக்ஸ்பியர் ல இருந்து கவிஞர் தாமரை வரை புட்டு புட்டு வச்சுட்டாங்களே! நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை...
ஆனால் கள்ளக்காதல் பற்றி ,பத்தி பத்தியா சொல்ல சில விஷயங்கள் இருக்கு...
என் சித்தப்பா வீட்டின் எதிர்வீட்டில் எப்போ பார்த்தாலும் அந்த வீட்டம்மாக்கும்,அவங்க கணவருக்கும் சண்டை நடந்துட்டே இருக்கும். அவங்களுக்கு ஒரே பையன். அவனும் காதல் திருமணம் முடிச்சிட்டு வந்து அவன் புது மனைவியை அடிச்சு,தொவச்சிட்டு இருப்பான். அந்த குடும்பமே பல நேரங்களில் அப்நார்மலாவே என் கண்ணுக்கு தெரியும். சித்தி தான் ஒரு முறை சொன்னாங்க.. அந்த வீட்டம்மா தன் வயசுக்கு வந்த ரெண்டு பொண்ணுங்களையும்,கணவனையும் விட்டுட்டு இந்த ஆளு கூட ஓடி வந்து,இந்த பையனை பெத்துகிட்டதாக.
அவங்க வீட்டில் எல்லாருமே இன்னும் ஏதோ ஒரு உறுத்தலோடவும்,அந்த பையன் ஏதோ ஒரு விதத்தில் தன் ஆத்திரத்தை தன் மனைவி மேலே காமிக்கிரதாகவும், ஒருவருக்கொருவர் ஒட்டாமலே வாழ்ராங்கலன்னு கூட பலமுறை எனக்கு தோணிருக்கு. எதுக்கு இந்த செயற்கையான பந்தம்...இந்த வாழ்க்கைக்கு தான் அந்த அம்மா ஆசைபட்டங்கலானு தெரியல..அந்த அம்மா மன அமைதிக்கு மதம் மாறி, சதா ஜெபத்தில் இப்போ எல்லாம்...!
(ம்ம்...கடவுள் மன்னிப்பது இருக்கட்டும். அவங்களோட ரெண்டு பொண்ணுங்களும்,கணவரும் மன்னிப்பாங்கலா னு தெரியல..)
மற்றொரு விஷயம்...
மற்றொரு விஷயம்...
கிட்டத்தட்ட ஆறு ,ஏழு மாசம் முன்னாடி தென் தமிழகத்தில் ஒரு ஊரில் தாலுக்கா ஆபிஸ் முன்னாடி மூணு குழந்தைங்க நிக்கிறாங்க. 7 வயசு பையன் கையில் கடிதம்,அவன் அருகில் 5 வயசு தங்கச்சி பாப்பா, அவள் இடுப்பில் 1.5 வயசு இன்னொரு தங்கச்சி பாப்பா..
எதுக்கு வந்திருக்காங்க??? என்ன கடுதாசி??
கொஞ்சம் நாமும் அந்த கடிதத்தை படிக்கலாம்..
மதிப்பிற்குரிய ஐயா ,
என் பெயர் அருண்குமார்(7 ),எனக்கு 2 தங்கச்சிங்க இருக்காங்க. அப்பா கூலி வேலை பார்க்கிறாங்க. ஒரு வாரமா நாங்க சரியா சாப்பிடலை. .சரியா தூங்கலை.. தங்கச்சி பாப்பா சதா அழுதுட்டே இருக்கா..அப்பாவும் அழுதுட்டே கஞ்சி காச்சி கொடுக்கிறார். அப்பா வேலைக்கு போனபிறகு நான் தான் பாப்பாவை பார்த்துக்குறேன்...பள்ளியில் நல்லா படிப்பேன்..ஆனால் இப்ப போவல...அம்மாவை ஒரு வாரமா காணோம் வீட்டில்..அம்மா பக்கத்து வீட்டு மாமா கூட போய்ட்டாங்கன்னு அம்மாச்சி சொல்லி அழுதுச்சு.. எங்க அம்மா எங்களுக்கு வேணும்...எப்பிடியாவது அம்மாவை கண்டுபிடிச்சு கொடுங்க ஐயா "
வணக்கத்துடன்,
அருண்குமார்..
இந்த கடிதம் உடனே பரிசீலனை பண்ணப்பட்டு, தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்பார்வையில் ,மேற்கொண்டு விசாரிக்க சிறுவன் அருண்குமார் வீட்டிற்கு சென்றது...அங்கே..அங்கே..அங்கே.
"பிணக்கோலத்தில் மூன்று குழந்தைகளும், அவர்கள் தந்தையும்..."
குழந்தையின் தைரியம் தந்தையிடம் இல்லைன்னு ஊரே அழுதிருக்கு (அந்த புகைப்படம் விகடனில் வந்து இருந்தது...என்னடா மனுஷ உணர்ச்சி இது னு ரொம்ப விரக்தியா இருந்தது எனக்கு...)
என் அழகு அம்மா!!
என்னுயிர் அம்மா!!
அப்பாக்கு தோள் சாய -
நீ அருகில் இல்லை!!
என் கன்னம் தட்டி
மிருதுவாய் கொஞ்ச-
நீ அருகில் இல்லை!!
பெரிய தங்கைக்கு
கதை சொல்லி உணவூட்ட-
நீ அருகில் இல்லை!!
சின்ன தங்கைக்கு
தாய்பால் புகட்ட-
நீ அருகில் இல்லை!!
என் அழகு அம்மா!
என்னுயிர் அம்மா..!!!
மகிழ்ச்சியாய் இனியாவது இரு !!
நாங்களும் இவ்வுலகில் இல்லை.!!!!
No comments:
Post a Comment