அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Saturday, November 5, 2011

என் மாவட்டம் இராமநாதபுரம்



இராமநாதபுரம்

இன்றைய பதிவு 'தென்னிந்தியாவின் காசி' என்று புகழப்படும் இராமநாதபுரம் மாவட்டத்தைப் பற்றியது. தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களுள் இராமநாதபுரமும் ஒன்று.

1910-ல் திருநெல்வேலி,  மதுரையின் சில பகுதிகளை இணைத்து இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கபட்டது.  பிரிட்டீஷார் காலத்தில் 'இராம்நாட்' என்று வழங்கப்பட்ட இது, சுதந்திரத்திற்குப் பின்பே தமிழில் இதற்கிணையான இராமநாதபுரம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

சுருக்கமான தகவல்கள்:


தலைநகர்
 இராமநாதபுரம்
பரப்பு
 4089 .கி.மீ.
மக்கள் தொகை
 11,87,604
ஆண்கள்
 9,83,376
பெண்கள்
 6,04,228
மக்கள் நெருக்கம்
 284
ஆண்-பெண் விகிதம்
 1,036
எழுத்தறிவு விகிதம்
 72.96%
இந்துக்கள்
 9,28,090
கிருத்துவர்கள்
 84,092
இஸ்லாமியர்
 1,74,079


இராமநாதபுரம் மாவட்டத்திற்கான இணையதளம்


ஆட்சியர் அலுவலகம்


மின்னஞ்சல்: collrrmd@tn.nic.in
தொலைபேசி: 04567-231220


வருவாய் கோட்டங்கள் இரண்டு: 1. இராமநாதபுரம், 2. பரமக்குடி,

தாலுகாக்ககள் ஏழு: 1. இராமநாதபுரம், 2. இராமேஸ்வரம், 3. திருவாடானை, 4. பரமக்குடி, 5. முதுகுளத்தூர், 6. கமுதி, 7. கடலாடி.

நகராட்சிகள் நான்கு: 1. இராமநாதபுரம், 2. பரமக்குடி, 3. கீழக்கரை, 4. இராமேஸ்வரம்

ஊராட்சி ஒன்றியங்கள் பதினொன்று: இராமநாதபுரம், திருப் புல்லாணி, மண்டபம், ராஊசிங்க மங்கலம், திருவாடானை, பரமக்குடி, போகலூர், நைனார் கோவில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி.

முக்கிய ஆறுகள்: வைகை, மற்றும் குண்டாறு

குறிப்பிடத்தக்க இடங்கள்:  'தர்பசயணம்' என்றழைக்கப்படும் திருப்புல்லாணி பெருமாள் கோயில், கிருத்துவர்கள் போற்றி வணங்கும் 'ஜான் டீ பிரிட்டோவின்ய ஒரியூர் சர்ச்.

அக்னி தீர்த்தம்: இராமேஸ்வரம் கோவிலிலிருந்து 100 மீ.தொலைவில் அமைந்தள்ளது.  இதில் ஒரு முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் கரைந்த போகும் என்பது நம்பிக்கை.

ஏர்வாடி தர்கா:

அரேபியாவிலிருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இப்ராஹிம் செய்யத் அலி சுல்தான் நினைவாக இந்தக் கல்லறை எழுப்பப்பட்டது.  சந்தனக்கூடுத் திருவிழா பிரபலமானது. மனநலம் குன்றியவர்களுக்கு சிகிச்சையளிக்கும் அற்புத்த் தலம்.

இருப்பிடமும், சிறப்புகளும்.


v  சென்னையிலிருந்து 510 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.
v  தேவிப்பட்டினம் (நவபாஷாணம்) இந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு சடங்குகள் செய்யும் கடலோரக் கிராமம்.
v  இராமேஸ்வரம் கோவில் உலகிலேயே மிக நீளமான சுற்றுப் பிரகாரத்தைக் கொண்டது.
v  ஜோதிர்லிங்க தளங்களில் ஒன்று.
v  அன்னை இந்திரா காந்தி பாலம் (பாம்பன் பாலம்)இராமேஸ்வரம் தீவை இணைக்கும் 2.2 கி.மீ. நீள பாலம். ஒரு வளைகுடாவின் மீது அமைக்கப்படும் இந்தியப் பாலங்களில் இதுவே மிக நீளமானது.
v  மன்னார் வளைகுடா கடலுயிரி காப்பகம்;  இந்தியாவின் முதல் கடலுயிரி காப்பகம். சுமார் 3600 இன கடல் உயிரிகள் இப்பகுதியில் உள்ளதாக்க் கூறப்படுகிறது.
v  குறிப்பிடத்தக்கோர்: முத்துராமலிங்க சேதுபதிபாஸ்கர சேதுபதி,வள்ளல் சீதக்காதிமுத்துராமலிங்கத் தேவர்டாக்டர் அப்துல்கலாம்.