அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Thursday, March 31, 2011

அவசியம் தெரிந்து கொள்க


ஜப்பான் போராடுவது ஏன்? : கதிர்வீச்சில் அப்படி என்ன தான் பாதிப்பு? (அவசியம் தெரிந்து கொள்க)

ஜப்பானில் கடந்த மார்ச் 11ம் தேதி நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டதில் புகுஷிமா அணுமின் நிலையம் சேதமைடந்தது.
கதிர்வீச்சை கட்டுப்படுத்த போராடும் விஞ்ஞானிகள்
இந்த பாதிக்கப்பட்ட அணுஉலையில் இருந்து பரவிய அணுக்கதிர்வீச்சு 6 ஆயிரம் மைல் தொலைவில் உள்ள பிரிட்டன் பகுதியில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் ஷயரிலும், கிளாக்சோ பகுதியிலும் பரவியிருப்பது தெரியவந்தது.மேலும் சுவிற்சர்லாந்து, ஸ்பெயின் ஊடாக பிரான்ஸ் வரை இக்கதிர்வீச்சு பரவிவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த இருவாரங்களுக்கு முதல் சுவிற்சர்லாந்தின் தினசரி பத்திரிகை ஒன்று, அன்றைய மாலை நேர வான்பரப்பு அன்னிச்சையான ஊதா நிறத்திலிருப்பது கண்டுவிட்டு, கதிர்வீச்சு தாக்கம் சுவிற்சர்லாந்திலும் சத்தம் போடாமல் பரவத்தொடங்கிவிட்டது என தெரிவித்திருந்தது. பேர்ன் அணு ஆராய்ச்சி பல்கலைக்கழகமும் இதனை உறுதிப்படுத்தியிருந்தது.
இந்த கதிர்வீச்சு உயிருக்கு அபத்து விளைவிக்காதது ஆகும்.இதே போல அமெரிக்காவிலும் , ஜரோப்பாவிலும் மிகச்சிறிய அளவிலான கதிர்வீச்சு இருப்பது ஏற்கனவே தெரியவந்துள்ளது.

அணுஉலையில் தொடர்ந்து கதிர்வீச்சு கசிந்து வருகிறது. அதைக்கட்டுப்படுத்த என்ஜினீயர்கள் தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிலிருந்து 6 ஆயிரம் மைல் தொலைவில் உள்ள பிரிட்டனிலேயே பரவியுள்ள கதிர்வீச்சு ஜப்பானில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஒரு மனிதனின் உடல் முழுவதும் கதிர்வீச்சுக்கு உள்ளானால் கீழ்கண்ட அளவுத் தொடர்புடைய விளைவுகள் காணப்படும் 20- 25 ரேட்களில் கதிர்வீச்சு இருக்குமானல் இரத்த அணுக்களில் மாறுதல் தோன்றலாம்,50--100 ரேட் இருக்குமானல் இரத்த அணுக்கள் சிதைவடையும்,100- - 200 ரேட் இருக்குமானல் காயங்களும், உடல்நலக்குறைவும் ஏற்படும்.200 - 400 ரேட் இருக்குமானல் இயலாமையும், இறப்பும் நேரலாம். 400 ரேட் இருக்குமானல் 50சதம் இறப்பு வாய்ப்பு, 600 ரேட் இருக்குமானல்  இறப்பு நிச்சயம்.
பாதிப்புக்குள்ளான அணு உலைகள்

பெண்களுடைய சினைப்பைகள் 500ரேட் கதிர்வீச்சுக்கு எதிர்ப்பட்டால் நிரந்தரமான மலட்டு தன்மை உண்டாகும். ஒவ்வொரு பெண்குழந்தையும் பிறக்கும் போதே தன் வாழ்நாளில் உற்பத்தி செய்ய வல்ல சினை மூட்டைகளுடன் தான் பிறக்கிறது. அதனால் சிறுகுழந்தைகள் கதிர்வீச்சுக்கு எதிர்படுமானால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும். 500 - 600 ரேட் கதிர்வீச்சுக்கு எதிர்ப்படும் ஆண்களின் விந்து பைகளுக்கு நிரந்தர மலட்டுதன்மை நேர்கிறது.

ஒரு ரேட் கதிர்வீச்சுக்கு எதிர்ப்படும் ஐந்து வயது குழந்தையை விட அதே அளவு கதிர்வீச்சுக்கு எதிர்ப்படும் மூன்றுமாத குழந்தைக்கு புற்றுநோய் தோன்றும் அபத்து அதிகம். முழு உடலும் கதிரவீச்சுக்கு ஆளாகையில் உடலில் பல உறுப்புகளில் புற்றுநோய் தோன்றலாம்.

ஹிரோஷிமா, நாகசாஹியில் 2ம் உலகப்போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு வீச்சில் பிழைத்தவர்களை சோதனை  செய்து பார்த்ததில் அவர்களின் உடல் வழக்கமான 46 குரோமோசோம்களுக்கு பதிலாக 92 அல்லது 184 குரோமோசோம்கள் காணப்பட்டது.

ஐப்பானில் ஏற்பட்டுள்ள கதிர்வீச்சு அபாயம் ஐப்பானுக்கு மட்டுமல்ல உலகமுழுவதுக்குமான அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கு . ஜெயசீலன் 
மேலும் சில பயனுள்ள ஆய்வுக்கட்டுரைகள்

இன்று கூகுளில் தெரிவது : பன்சென் சுடரடுப்பும் அதன் பயன்பாடும்!

சிங்கையில் குருஷேத்திரம்; சிங்காரச் சீமையின் மறுபக்கம் - விமர்சனம்

Tuesday, March 29, 2011

வேலி குறும்படம்


சிங்களக் காடையரால் சீரழிக்கப்பட்ட இசைப்பிரியா நடித்த வேலி குறும்படம்PDFக்கு மாற்றவும்அச்சடித்து எடுக்கமின் அஞ்சல் மூலம் அனுப்ப…


சிங்களக் காடையர்களால் சின்னாபின்னமாக்கப்பட்ட இசைப்பிரியா நடித்த வேலி குறும்படம். போரின் இறுதி நாட்களில் படுகொலைசெய்யப்பட்டவர்களில் போராளிக் கலைஞர் இசைப்பிரியாவும் ஒருவராவார். நிதர்சனம் நிறுவனத்தின் ஊடாக தன்னை வெளிப்படுத்திய இசைப்பிரியா “ஒளிவீச்சு” என்கின்ற மாதாந்த காண்ஒளி விபரணத்தின் தொகுப்பாளராகவும் செயற்பட்டார். பல்வேறு விபரணங்களுக்கு குரல் வழங்கிய இசைப்பிரியா பின்னைய நாட்களில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார். காயம் அடைந்த நிலையிலேயே அவர் படையினரிடம் சிக்கிச் சீரழிந்தார் என்ற செய்தியே வெளிஊடகங்களுக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடித்த "வேலி" குறும்படம்.

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Friday, March 25, 2011

அணுகுண்டு வெடிப்புக்கள் (படங்கள்)


இதுவரை இடம்பெற்ற மோசமான அணுகுண்டு வெடிப்புக்கள் (படங்கள்)

AddThis Social Bookmark Button
அணு உலை கதிரிவீச்சை கட்டுப்படுத்த ஜப்பான் படாதபாடு பட்டு வருகிறது.
அது ஒரு புறம் இருக்க இதுவரை உலகில் இடம்பெற்ற மோசமான அணுகுண்டு வெடிப்புக்களின் படங்கள் இங்கே- இவற்றில் சில அணு குண்டு பரிசோதனைகளாகும்.

Skype உபயோகிப்பவரா நீங்கள்? - இதையும் கொஞ்சம் பாருங்களேன்! (படங்கள்)

ஜப்பான் பேரழிவு - மனதை உருக்கும் படங்கள்

ஜப்பான் சுனாமிக்கு முன்னரும் பின்னரும் அதிர்ச்சிதரும் புகைப்படங்கள்

கேட் மிடில்ட்டனின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின

உலகின் மிகச்சிறந்த கிரியேட்டிவ் தந்தை இவரோ? - இதோ வண்ணப் புகைப்படங்கள்!

Thursday, March 24, 2011

அதிமுகவுடன் கூட்டணி ஏன் ?-விஜயகாந்த்


திமுகவுடன் கூட்டணி ஏன் ?-விஜயகாந்த்


""நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான்இந்த கூட்டணியை அமைத்துள்ளேன்,'' என,தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை ரோட்டில்,தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை 4.35 மணிக்கு தன் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். திருக்கோவிலூர் தொகுதி தே.மு.தி.க.,வேட்பாளர் வெங்கடேசன்உளுந்தூர்பேட்டை தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் குமரகுரு ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது: விஜயகாந்த் தெய்வத்தோடுமக்களோடு கூட்டணி என்று சொல்லிவிட்டு அ.தி.மு.க.வோடு எப்படி கூட்டணி வைத்தார் என கேட்பார்கள். தெய்வத்தோடுமக்களோடு இருக்கும் கூட்டணி எப்போதும் இருக்கும். நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான்இந்த கூட்டணியை அமைத்துள்ளேன்.

காங்.கட்சியில் ஐவர் குழுஅறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு நடத்திக்கிட்டு இருக்கு. மனைவிமகளை மேல் மாடியில சி.பி.ஐ.,விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. கீழையும் பிரிச்சி மேயராங்கமேலயும் பிரிச்சி மேயராங்க இதுதான் அரசியல். கருணாநிதியின் தாரக மந்திரம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்எங்கும் ஊழல் எதிலும் ஊழல். அதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க.,கூட்டணி அரசை தெய்வம் காலி செய்யும். ராமதாஸ்கருணாநிதிக்கு பூஜ்யம் மார்க் போட்டார். இப்ப சொல்றார் கருணாநிதி ஹீரோவாம். இது கொள்கை கூட்டணி இல்லைமக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டணி. இரண்டு ஏக்கர் நிலம் யாருக்கு கொடுத்தனர். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவதாகக் கூறி நீங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில்ஐந்து லட்சம் பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை.

மதுரைக்கு வந்து பிரசாரம் பண்ணிப்பார் என்று அழகிரி கூறுகிறார். மதுரைக்கு பிரசாரத்துக்கு வருவேன். இந்த உருட்டல் மிரட்டல தான் உங்க ஆட்சி நடந்துட்டு இருக்கு அது என்கிட்ட செல்லாது. ரிஷிவந்தியம் தொகுதியில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டும் என்ற முடிவோடு தான் இங்கு போட்டியிடுகிறேன். ரிஷிவந்தியத்தை குஷிவந்தியமாக மாற்றுவதே எனது லட்சியம். ஏன் ரிஷிவந்தியத்தில் போட்டியிட முடிவு செய்தேன் என்பதை உங்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.

பத்திரிக்கைகளில் வெளியான செய்திபடிநான் கடந்த முறை போட்டியிட்ட விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் இருக்கிறார். ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்சிவன் இருக்கும் இடத்தில் எல்லாம் இந்த விஜயகாந்த் இருப்பான். சிவன் எப்படி தனது மனைவிக்கு சரிபாதி அளித்தாரோஅதேபோல் எனது மனைவிக்கு நானும் சமஉரிமை அளித்துள்ளேன். சிவன் அதர்மத்தை அழிப்பவர். அதனால்கருணாநிதியின் அதர்மத்தை அழிக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றிக்கேட்டால் கடந்த ஆட்சியில் நீங்கள் செய்யவில்லையா என கேட்டு திசை திருப்புகிறார். கடந்த, 1967ல் காங்.கட்சிக்கு எதிராக ஏழைகள் அனைவரும் தேர்தலில் நிற்க வேண்டும் என அண்ணாதுரை வாய்ப்பளித்தார். இப்போது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தி.மு.க.,வில் தேர்தலில் "சீட்தரப்படும் அவலம் உள்ளது. நான் ஆறாவது முறையாக முதல்வராக வேண்டும் அதனால்எனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிடுவதாக கருணாநிதி கூறுகிறார். இத்தனை ஆண்டுகள் திருவாரூர் தெரியவில்லையாகருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் தொடருவார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த நன்மையும் அவர் செய்யமாட்டார். காங்.கட்சிக்கு 63 சீட் கொடுக்க முடியாது என்று கூறிய கருணாநிதிஅதன்பின் எப்படி ஒதுக்கினர். தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம்,என்றார்.

"முரசுசின்னம் கிடைக்குமா? ""தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது,'' என விருதுநகர் தே.மு.தி.க.,வேட்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தே.மு.தி.க.கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 41 தொகுதிகளில் முரசு சின்னம் ஒதுக்கீடு செய்ய தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளனர்,'' என்றார். தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இது வரை தேர்தல் கமிஷன் தே.மு.தி.க.விற்கு "முரசுசின்னம் ஒதுக்கீடு செய்ததாக தெரிவிக்கவில்லை. சின்னம் ஒதுக்கீடு செய்ய அவகாசம் இருப்பதால் இனிமேல் தேர்தல் கமிஷன் அனுமதிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.